விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சேனலாக வலம் வரக்காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் விதவிதமான எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகள் தான். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு ரியாலிட்டி ஷோக்களையும் காண ரசிகர்கள் பட்டாளம் லட்சக்கணக்கில் காத்திருக்கின்றனர். அந்த ரியாலிட்டி ஷோக்களின் பட்டியலில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பான முதல் 5 சீசன்களையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
அதன் பின்னர் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் இருந்து கமல் பாதியில் விலகிக்கொள்ள, அவருக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியும் ஏகபோக வரவேற்புடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2’ நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் சீசன் முதல் 4வது சீசன் வரை போட்டியாளர்களாக ஷிவானி - சோம் சேகர், கேபிரியல்லா - ஆஜீத், அனிதா - ஷாரிக், நிஷா - தாடி பாலாஜி, வனிதா - சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா - ஜித்தன் ரமேஷ், ஜூலி - சென்றாயன், பாத்திமா - மோகன் வைத்யா ஆகியோர் பங்கேற்றனர். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் நடுவர்களாக இருந்தனர்.
பிக்பாஸ் ஜோடிகள் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது இரண்டாவது சீசன் மே 8 முதல் ஆரம்பமாக உள்ளது. இதற்கான புரோமோ வீடியோக்களை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. இந்த சீசனில் அபிஷேக்-சுருதி, ஐக்கி பெர்ரி-தேவ், சுஜா வருணி-சிவகுமார், ஆர்த்தி-கணேஷ், இசைவாணி-வேல்முருகன், பாவனி-அமீர், தாமரை-பார்த்தசாரதி, டேனி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
Also Read : இந்தி நல்ல மொழி... இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்... நாம் அதை கற்றுக் கொள்ள வேண்டும் - சுஹாசினி மணிரத்னம்
இந்த முறை ரீல் ஜோடிகளுடன் ரியல் ஜோடிகளும் பங்கேற்கின்றனர். அதாவது சுஜா வருணி, ஆர்த்தி, தாமரை ஆகியோர் தங்களது கணவர்களுடன் களமிறங்க உள்ளனர். பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியை பிக்பாஸ் சீசன் 5-யின் வின்னர் ஆன ராஜுவும், ரன்னரான பிரியங்காவும் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர். போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் விவரங்கள் வெளியான நிலையில், அடுத்து நடுவர்களாக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Also Read : மைக்கை வீசிய பார்த்திபன், அதிர்ச்சியான ஏ.ஆர்.ரஹ்மான்... என்ன நடந்தது?
முதல் சீசனில் பங்கேற்ற ரம்யா கிருஷ்ணன் இந்த முறையும் ஜட்ஜாக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் இன்னொரு நடுவராக வரப்போவதாக சோசியல் மீடியாவில் செய்தி பரவி வருகிறது. கடந்த முறை வனிதா - ரம்யா கிருஷ்ணன் இடையே வெடித்த கமெண்ட் பஞ்சாயத்து நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைத்தது. தற்போது மற்றொரு மாஸான விஷயத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்..
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.