Home /News /entertainment /

ஒல்லி ஆகலாம் அதுக்காக இப்படியா? ஒரு புகைப்படத்தால் ஊரையே பேச வைத்த விஜய் டிவி ரம்யா!

ஒல்லி ஆகலாம் அதுக்காக இப்படியா? ஒரு புகைப்படத்தால் ஊரையே பேச வைத்த விஜய் டிவி ரம்யா!

விஜய் டிவி ரம்யா

விஜய் டிவி ரம்யா

விஜய் டிவி ரம்யா போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிடீர்கள் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  பிரபல தமிழ் நடிகையும், வீடியோ ஜாக்கியுமான ரம்யா சுப்ரமணியன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார். 13 ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். மேலும், பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், மொழி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து ஓ காதல் கண்மணி, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இவருக்கு 'ஃபிட்னஸ் ஃப்ரீக்' என்ற இன்னொரு முகமும் இருக்கிறது. கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அலாதி பிரியம் இவருக்கு உண்டு. அதேபோல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உடல் எடை சம்பந்தமான பல குறிப்புகளை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதேபோல, தனது சமூக ஊடக பக்கத்திலும் பிட்னஸ் தொடர்பான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

  இதையும் படிங்க.. மீனாவால் மீண்டும் அசிங்கப்படும் தனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று!

  உடல் ஆரோக்கியத்திலும், பிட்னசிலும் அதிக கவனம் கொண்ட இவர் சமீபத்தில் ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளராக தகுதியடைந்ததை அறிவித்திருந்தார். நியூயார்க்கில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டகிரேடிவ் நியூட்ரிஷனால் நடிகை ரம்யா ஒரு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக சான்றிதழ் பெற்றுள்ளார். அதன்படி இவர் தற்போது, மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முழுமையாக வழிநடத்துவதற்கும் தகுதியான ட்ரைனர் ஆவார்.

  இதையும் படிங்க.. வில்லியின் ரீஎன்ட்ரியை பாட்டு போட்டு வரவேற்கும் சீரியல் குழு! பாரதி கண்ணம்மா வெண்பா ரிட்டர்ன்ஸ்

  இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது சமூக ஊடக தளத்தில் கூட பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "2 வருடம் சரியாக தூக்கமில்லாமல், வாராந்திரம் மாடியூல் படிப்பது, பணிகளைச் செய்வது, நேரடி பயிற்சி அழைப்புகள் மற்றும் படப்பிடிப்பு / வேலை / பயணம் மற்றும் வாழ்க்கைக்கு இடையில் வந்த ஒவ்வொரு தேர்விலும் தகுதி பெறுதல் அகியவற்றை செய்தேன்... இறுதியாக, நான் இப்போது சான்றளிக்கப்பட்ட 'ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளர்' என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று சந்தோஷத்துடன் பகிர்ந்திருந்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by Ramya Subramanian (@ramyasub)


  இந்நிலையில் ரம்யா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முன்பு இருந்ததை விட மிகவும் ஒல்லியாக தெரிகிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிடீர்கள் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கு உடல் எடையை குறைத்து சிறிய பெண் போல தோற்றமளிக்கிறார். மேலும் அனைவரும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹெல்த் சம்பந்தமான பல கேள்விகளையும் அவரிடம் கேட்டு வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Instagram, Vijay tv, VJ Ramya

  அடுத்த செய்தி