அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். குறிப்பாக 'ஓ சொல்றியா மாமா..' பாடல் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், வெளியான இத்திரைப்படத்தின் உலகளவிலான தியேட்டர் வசூல் 300 கோடியை கடந்துவிட்டதாம்.
'சாமி..சாமி' பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் அசத்தலாக நடனமாடியுள்ளனர். அண்மையில் ராஷ்மிகா தன் இஸ்டாவில் வெளியிட்டுள்ள சாமி சாமி ரீல்ஸ் வீடியோவுக்கு லைக்குகள் குவிந்தன.
`சாமி சாமி’ பாடலுக்கு தமிழ் பிரபலங்கள் நடனமாடி தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளிட்டு வருகின்றனர்.
குறிப்பாக பெண் சீரியல் பிரபலங்கள் பலர் ”சாமி சாமி’’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
கலர்ஸ் தமிழின் ஹிட் சீரியலான இதயத்தை திருடாதே தொடரின் நாயகி ஹிமா பிந்து சாமி சாமி பாடலுக்கு நடனம் ஆடிய ரீல்ஸ்..
View this post on Instagram
இந்நிலையில் தற்போது விஜய் டிவி-யில் பிரபல காமெடி நடிகரான ராமர் `சாமி சாமி' பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
[video width="720" height="1280" mp4="https://images.news18.com/tamil/uploads/2022/01/me_jackline_1641365593264267.mp4"][/video]
ஷூட்டிங் ஸ்பாட்டில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடி ரகளை செய்த வீடியோவை விஜய் டிவி நடிகை ஜாக்குலின் தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரல்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Rashmika Mandanna, Allu arjun, Colors Tamil | கலர்ஸ் தமிழ், Trending, Trending Videos, Vijay tv