விஜய் டிவி ராமர் என்றால் ரசிகர்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ‘சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை’ காமெடி எபிசோடு தான். ராமரும் நாஞ்சில் விஜயனும் சேர்ந்து செய்த இந்த காமெடி ஆக்டிங் இணையத்தை புரட்டி போட்டது. இந்த வீடியோ யூடியூப்பில் மில்லியன் கணக்கில் லைக்ஸ்களை குவித்தது. ஒரே நாளில் ராமர் மக்கள் போற்றும் கலைஞராக கொண்டாடப்பட்டார். அதன் பின்பு அவருக்கென தனி ஷோவையே விஜய் டிவி ஒதுக்கியது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ‘என்னம்மா’ ராமர் என்பதே அவரின் பெயர் ஆனது.
ராமரின் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, ஆத்தாடி என்ன உடம்பு போன்ற வசனங்கள் இன்றளவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ராமரை மையமாக வைத்து ‘ராமர் வீடு’ என்ற காமெடி நிகழ்ச்சி, சகள vs ரகள, ராமர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் ராமருக்காகவே டி.ஆர்.பியில் இடம் பிடித்தது. 20 வருடங்களாக சின்னத்திரையில் தலைக்காட்டிக் கொண்டிருக்கும் ராமர் இப்போது பெரிய திரையிலும் முகம் காட்ட தொடங்கி விட்டார். டிவி மட்டுமின்றி, பல படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.‘கோமாளி’, ‘சிக்ஸர்’ உள்பட பல படங்களில் ராமர் நடித்துள்ளார்.
கல்யாண விஷயத்தில் அவளை ஏமாத்திட்டாங்க.. பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி!
ராமரின் சொந்த ஊர், மதுரை பக்கத்துல மேலூர். இவரின் மனைவி கிருஷ்ணவேணி. ராமருக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என 3 குழந்தைகள் உள்ளனர். தனது மனைவியுடன் mr & mrs, மகள்களுடன் சூப்பர் டாடி போன்ற நிகழ்ச்சிகளிலும் ராமர் கலந்து கொண்டு அசத்தி இருக்கிறார். இது எல்லாமே ராமர் பற்றி அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று தற்போது லீக் ஆகியுள்ளது.
அது என்னவென்றால், ராமர் சுக்காம்பட்டி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் (vao) ஆவர். இத்தனை நாள் வரை இவரை வெறும் சின்னத்திரை காமெடி கலைஞர் என்று தான் மக்களுக்கு தெரியும். ஆனால் இவர் அரசு சம்பளம் பெறும் அரசு அதிகாரி என்பது இப்போது தெரிய வந்துள்ளது. ராமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இவருக்கு இதே வேலை தான்.. பிரபல சீரியல் நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! ஏன்?
அதில்,”கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.