• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • விஜய் டிவி சீரியலுக்கு வந்த யூடியூப் பிரபலம்.. எகிறும் எதிர்பார்ப்பு!

விஜய் டிவி சீரியலுக்கு வந்த யூடியூப் பிரபலம்.. எகிறும் எதிர்பார்ப்பு!

யூடியூப் பிரபலம்

யூடியூப் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய சீரியலான முத்தழகு சீரியலில் அவரும் நடிக்கிறார்.

 • Share this:
  விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் புத்தம் புது சீரியலான முத்தழகு சீரியலில் மிஸ்டர் அன்ட் மிஸ்சஸ் சின்னத்திரையில் பங்கேற்ற ராஜ்மோகன் நடிக்கிறார்.

  ரியாலிட்டி ஷோக்களை புதிய கான்செப்டில் உருவாக்குவதில், தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவிக்கு நிகர் யாருமில்லை என்று கூறலாம். புது கான்செப்ட்டை மக்கள் விரும்பும் ஷோவாக மாற்றுவதில் கில்லாடி. அந்தவகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மிஸ்டர் அன்ட் மிஸ்சஸ் சின்னத்திரை அமோக வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் தொடங்கிய வீறுநடை மூன்றாவது சீசனிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  இதில் குக்கு வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அதே போல குக்கு வித் கோமாளியில் கலக்கிய சரத்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும், யோகேஷ் – நந்தினி, மணிகண்டன் – சோபியா, வேல்முருகன் – காலா, யுவராஜ் – காயத்ரி, ராஜ்மோகன் - காயத்திரி என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் விறுவிறுப்பான டாஸ்க்குகள் கொடுத்து, அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அடுத்த ரவுண்டுக்கும், சரியான பர்ஃபாமென்ஸ் கொடுக்காதவர்கள் எலிமினேட் செய்யப்படுகின்றனர்.

  யூடியூப் மற்றும் பட்டிமன்றங்களில் பங்கேற்று தமிழக மக்களிடையே பிரபலமான ராஜ்மோகன், தனது மனைவியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிறப்பாக விளையாடிய அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய சீரியலான முத்தழகு சீரியலில் அவரும் நடிக்கிறார். விவசாயம் மற்றும் கிராமத்து கதைக்களத்தை கொண்டு உருவாகும் அந்த சீரியலின் புரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது.

  அந்த புரோமோவில் ராஜ்மோகனும் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தை அவர் ஏற்று நடிக்க இருப்பதாக தெரிகிறது. கூட்டுக் குடும்பம், விவசாயம், கிராம மக்களின் வாழ்வியல் முத்தழகு சீரியலில் எதிர்பார்க்கலாம்.

  இந்த சீரியலில் நடிப்பவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாக இருக்கின்றனர். புரோமோவில் இடம்பெற்ற காட்சிகளின்படி, கடன் வாங்கி இருக்கும் கிராமத்து பெண்மணியான நாயகிக்கு சொந்தமான காளை மாடுகளை கடன் கொடுத்தவர்கள் வந்து ஒட்டி செல்கின்றனர். இதை தடுத்து நிறுத்த போகும் நாயகியிடம், கடனை கொடுத்து விட்டு காளைகளை இழுத்து செல்ல சொல்கின்றனர்.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  காளைகள் இன்றி தொடர்ந்து விவசாய பணிகளில் ஈடுபடும் நாயகி முத்தழகு, தனக்கு தானே ஏர் பூட்டி கொண்டு நிலத்தை உழும் வேலையில் வியர்வை சிந்த ஈடுபடுகிறார். இந்த மண்ணை நேசிக்கும் முத்தழகின் விதியை மாற்ற சாமி கண்ணை திறப்பாரா என்ற ஏக்கத்துடன் காரில் இருந்து இறங்கி பார்க்கிறார் நாயகனின் தாய். கூடவே நாயகனும் இருக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ள இந்த சீரியல் எப்போது முதல் எந்த நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: