முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரு நியாயம் வேணாமா ? காந்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 'ராஜா ராணி' சீரியல்: வைரலாகும் வீடியோ

ஒரு நியாயம் வேணாமா ? காந்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 'ராஜா ராணி' சீரியல்: வைரலாகும் வீடியோ

காந்தாரா - ராஜா ராணி 2

காந்தாரா - ராஜா ராணி 2

இந்தப் புரமோ வீடியோவுக்கு காந்தாரா படத்தையும் விட்டுவைக்கலையா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு நிகராக டிவி சீரியலின் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. பெரும்பாலான சீரியல்களின் கதைகூட தமிழ் சினிமாவில் வந்த வெற்றிப் படங்களின் கதைதான். உதாரணமாக ஆனந்தம் படத்தின் கதையை உல்டா செய்து உருவானதுதான் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிவி சீரியல்கள் பார்ப்பதை வழக்கமாக்கிகொண்டுள்ளனர். சினிமா அப்டேட்டுகளுக்கு கூட பெரிதாக காத்திருப்பதில்லை. ஆனால் டிவி சீரியல் அப்டேட்டுகளுக்கு பெரும் வரவேற்பு இருந்துவருகிறது. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி தொடர்களின் ப்ரமோ வீடியோ டிரெண்டானது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி தொடரின் புரமோ வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஹீரோ, ஹீரோயினை வில்லன் கேங் கடத்தி வைத்திருக்கிறது. அப்போது ஹீரோவை வில்லன் அடிக்க அவர் மயங்கி விழுகிறார். மற்றொரு பக்கம் காளிக்கு பூஜை நடக்கிறது.

பின்னர் ஏய்.... என்ற சத்தத்துடன் வீரம் வந்தவராக காந்தாரா ரிஷப் ஷெட்டி போல ஆவேசத்துடன் வில்லன் கேங்கை வெளுத்து வாங்குகிறார். வீடியோவில், இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு நோக்கத்தை மட்டுமே கொண்ட ஒரு கற்பனை கதையாகும். நாங்கள் இயற்கைக்கு புறம்பான மூட நம்பிக்கையுள்ள அல்லது மாய மந்திர பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புரமோ வீடியோவுக்கு காந்தாரா படத்தையும் விட்டுவைக்கலையா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் .

First published:

Tags: Vijay tv