Home /News /entertainment /

அய்லா அக்காவாகிட்டா... கர்ப்பமான விஷயத்தை வீடியோவுடன் வெளியிட்ட ஆல்யா மானசா-சஞ்சீவ் தம்பதி!

அய்லா அக்காவாகிட்டா... கர்ப்பமான விஷயத்தை வீடியோவுடன் வெளியிட்ட ஆல்யா மானசா-சஞ்சீவ் தம்பதி!

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

சஞ்சீவ் லைவில் சொல்லும் போது தான் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது நான்கரை மாதம் ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஆல்யா.

    தான் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கும் விஷயத்தை தங்களது யூ-ட்யூபில் சேனலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் சஞ்சீவ் - ஆல்யா தம்பதியினர்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வருபவர் ஆல்யா மானசா. அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

    இவர்களுக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமானார். அதே சேனலில் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவ், அந்த சீரியல் முடிந்துவிடவே சன் டிவி-யில் சமீபத்தில் தொடங்கிய ’கயல்’ சீரியலில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை இன்ஸ்டாகிடாம் லைவில் சஞ்சீவ் தெரிவித்திருந்தார். அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரசிகரின் கேள்விக்கு தலையாட்டி பதில் சொன்னார் ஆல்யா.



    இந்நிலையில் சஞ்சீவ் - ஆல்யா தம்பதி தங்கள் யூ-ட்யூபில் ‘அய்லா அக்காவாகிட்டா’ என தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை வீடியோவாகவே பதிவிட்டுள்ளனர்.  அதில் சஞ்சீவ் லைவில் சொல்லும் போது தான் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது நான்கரை மாதம் ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஆல்யா.

    ராஜா ராணி சீரியலில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த நேரத்தில் இரண்டாவது குழந்தைக்கு தாங்கள் திட்டமிடவில்லை என்பதால் இந்த விஷயம் தங்களுக்கே ஷாக்கிங் சர்ப்ரைஸ் எனவும் தெரிவித்தனர். அதோடு இதை ராஜா ராணி டீமிடம் சொன்ன போது, அவர்கள் சேனல் தரப்பில் பேசிவிட்டு, சீரியலில் இருந்து ஆல்யாவை நீக்காமல், அதற்கேற்றார் போல கதையை மாற்றுவதாக உறுதியளித்தார்களாம். இதைக்கேட்ட போது தனது கண்களில் கண்ணீர் வந்ததாக தெரிவித்தார் ஆல்யா.

    இதையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி