• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கர்ப்பமான ராஜா ராணி ஆல்யா மானசா... இப்படியொரு குத்தாட்டமா?

கர்ப்பமான ராஜா ராணி ஆல்யா மானசா... இப்படியொரு குத்தாட்டமா?

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சஞ்சீவ், ‘ஒரு குட் நியூஸ் இருக்கு’ என்றவாறு ‘அய்லா பார்ட் 2’ என தனது மகளின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னார்.

  • Share this:
    கர்ப்பமாக இருக்கும் ‘ராஜா ராணி’ ஆல்யா மானசா சக நடிகருடன் குத்தாட்டம் போடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வருபவர் ஆல்யா மானசா. அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

    இவர்களுக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமானார். அதே சேனலில் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவ், அந்த சீரியல் முடிந்துவிடவே சன் டிவி-யில் சமீபத்தில் தொடங்கிய ’கயல்’ சீரியலில் நடித்து வருகிறார்.

    இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சஞ்சீவ், ‘ஒரு குட் நியூஸ் இருக்கு’ என்றவாறு ‘அய்லா பார்ட் 2’ என தனது மகளின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னார். இதை முதன் முறையாக இந்த லைவில் தான் குறிப்பிடுகிறேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து பிரபலங்களும், ரசிகர்களும் ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by alya_manasa (@alya_manasa)






    இந்நிலையில் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர் பிரதோஷுடன் இணைந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள ஆல்யா, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ‘ஆல்யா கர்ப்பமாக இருப்பதாக சொல்லிவிட்டு, இப்படி ஆடுகிறாரே? உண்மையிலேயே கர்ப்பமா?’ என்ற ரீதியில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: