Home /News /entertainment /

Raja Rani 2: 'உங்களை மிஸ் செய்கிறேன்' ராஜா ராணி ஸ்ரீநிதி எமோஷனல் பதிவு!

Raja Rani 2: 'உங்களை மிஸ் செய்கிறேன்' ராஜா ராணி ஸ்ரீநிதி எமோஷனல் பதிவு!

ஸ்ரீநிதி சுதர்ஷன்

ஸ்ரீநிதி சுதர்ஷன்

வி.ஐ.டி கல்லூரியில் சட்டப்படிப்பை 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறேன் என்பதை தற்போது நம்ப முடியவில்லை

கல்லூரி வாழ்க்கையையும், நண்பர்களையும் மிஸ் செய்வதாக சின்னத்திரை பிரபலம் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீநிதி சுதர்சன், நடித்துக் கொண்டே சட்டக்கல்லூரியிலும் படித்து வந்தார். கல்லூரி வாழ்க்கையை நிறைவு செய்திருக்கும் அவர், நண்பர்களையும், ஆசியர்களையும் மிஸ் செய்வது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், " வி.ஐ.டி கல்லூரியில் சட்டப்படிப்பை 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறேன் என்பதை தற்போது நம்ப முடியவில்லை. வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதற்கு ஒரு மணி நேரமாகும். அங்கிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்ல ஒரு மணி நேரமாகும்.

ஷூட்டிங் நிறைவடைந்தபிறகு வீட்டிற்கு திரும்புவதற்கு இரண்டு மணி நேரமாகும். இதனைக் கணக்கிடும்போது குறைவான நேரங்கள் மட்டுமே கல்லூரியில் நான் செலவழித்திருக்கிறேன். ஆனால், அந்த சில மணி நேரங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. அங்கு நான் பழகிய நபர்களுடனான உறவு என்பது கல்லூரியுடன் நிறைவடையாது, என்னுடைய வாழ்க்கை முழுவதுமே அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Nidhi (@sreenidhi_)


"கல்லூரி வகுப்பறையில் தூங்குவதை மிகவும் மிஸ் செய்வேன். செமஸ்டருக்காக அட்டனன்ஸ் கேட்டு கெஞ்சுவேன், தேர்வுக்கு முந்தைய நாள் இரவு மட்டுமே தயாராவேன். அந்த அனுபவங்கள் எனக்கு இனி கிடைக்காது. நான் படிக்கும்போது என்னுடன் படித்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். யாரிடமும் வெட்கமில்லாமல் உதவி கேட்பேன். கொஞ்சமும் கூச்சப்படமாட்டேன். அசைன்மென்டு முதல் அனைத்துக்கும் மற்றவர்களிடம் உதவி கேட்டிருக்கிறேன்.

நீங்கள் எல்லோரும் எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். என்னுடன் இருந்திருக்கிறீர்கள். இதற்கு முன்பு உங்களுக்கு நான் நன்றி சொன்னதில்லை. அவற்றுக்காக எப்போதும் நன்றி கடன் பட்டிருப்பேன். என்னுடன் படித்த நிறையபேரின் புகைப்படங்கள் என்னிடம் இல்லை. இருப்பினும் அனைவரும் என்னுடைய மனதிலும், நினைவிலும் என்றென்றும் இருப்பீர்கள். விரைவில் நாம் ஒன்றாக சந்திக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் "ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் என்னைத் திட்டியிருந்தாலும், ஒவ்வொரு நேரமும் எனக்காக அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள், பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்" என ஸ்ரீநிதி சுதர்சன் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் இருவரை பற்றியும் குறிப்பிட்டுள்ள அவர், அவர்களைப் பற்றி நான் நினைப்பதை எழுத தேவையில்லை என்றாலும் லவ் யூ எனத் தெரிவித்துள்ளார். அவர்களுடன் பழகிய நாட்கள் என்றும் மறையாது எனத் தெரிவித்துள்ளார்.

7 சி மூலம் சின்னத்திரையில் நுழைந்த ஸ்ரீநிதி, ராஜா ராணி 2 சீரியலில் கவிதாவாக நடித்து வருகிறார். அசத்தலான நடிப்பு மூலம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளார். வள்ளி தொடரில் நந்தினியாகவும், ரோமாபுரி பாண்டியனில் பெருந்தேவியாகவும் நடித்துள்ளார். பகல் நிலவு சீரியலில் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்த அவர், யாரடி நீ மோகனியில் ஜனனியாகவும் நடித்து அசத்தினார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: TV Serial

அடுத்த செய்தி