விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் மிகவும் விருப்பப்படும் சீரியல்களில் ஒன்றாக ராஜா ராணி சீசன் 2 உள்ளது. ராஜா ராணி சீரியல் இந்த அளவுக்கு ஹிட்டாக காரணம் அதன் முதல் பாகம் தான், அதில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா மானசாவும், கார்த்திக் கதாபாத்திரத்தில் சஞ்சீவும் நடித்திருந்தனர்.
சீரியலில் காதலர்களாக நடித்தவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரீல் டூ ரியலிலும் இந்த ஜோடி ஒன்று சேர்ந்ததால் ‘ராஜா ராணி’ சீரியலுக்கான மவுசு பல மடங்கு கூடியது.
இதனைத் தொடர்ந்து ‘ராஜா ராணி சீசன் 2’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசாவும், நடிகர் சித்து, சரவணன் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர். இரண்டாவது முறை கர்ப்பம் ஆனதால் ஆல்யா மானசா சீரியலை விட்டு விலகினார், அவருக்குப் பதிலாக சந்தியா கேரக்டரில் ரியா என்பவர் நடித்து வருகிறார்.
also read : செம்ம ஹாப்பியில் சித்து, ஸ்ரேயா ஜோடி.. அந்த குட் நியூஸ் என்ன தெரியுமா?
கதைப்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என நினைத்த சந்தியாவிற்கு, எதிர்பாராதவிதமாக சரவணன் உடன் திருமணம் நடக்கிறது. திருமணமான பிறகு சந்தியாவின் லட்சியத்தை அறிந்து கொள்ளும் சரவணன், அவரது கனவை நிறைவேற்ற குடும்பத்தினருக்கு தெரியாமல் உதவி வருகிறார். ஏனென்றால் படிக்கவில்லை என நினைத்த மருமகள் நன்றாக படித்திருப்பதே சரவணின் அம்மாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் சந்தியாவை அவரது மாமியார் புரிந்து கொண்டார். இப்போது தான் குடும்பத்தினர் சந்தியாவை ஏற்றுக்கொண்டதால், சரவணன் யாருக்கும் தெரியாமல் அவரை ஐ.ஏ.எஸ் ஆக்க முயற்சித்து வருகிறார்.
விறுவிறுப்பான திருப்பங்களுடன் சீரியல் ஓடிக்கொண்டிருந்த நிலையில், சந்தியா ஐபிஎஸ் படிப்பது மட்டும் சிவகாமி அம்மாவிற்கு தெரிந்தால் வீட்டிற்குள் பூகம்பம் வெடிக்கும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு முன்னதாகவே சிவகாமி வீட்டிற்குள் பெரிய பூகம்பம் வெடிக்கப்போகிறது. வீட்டில் காலையில் அனைவரும் முற்றத்தில் அமர்ந்திருக்க, சரவணனின் அப்பா செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருக்கார். சுற்றிலும் சிவகாமி அம்மா, சரவணன், சந்தியா, சரவணனின் தம்பி, அவரது மனைவி அர்ச்சனா ஆகியோர் இருக்கிறார்கள்.
also read : மாறிப்போன ஜோடி... சூடு பிடிக்கும் ஈரமான ரோஜாவே 2 கதைகளம்!
சரவணன் சந்தியா இருவரும் தென்காசியில் ஒரு விபத்தில் மற்றவர்களை காப்பாற்றி சென்றனர். அது தொடர்பான செய்தி நியூஸ் பேப்பரில் வர அதை தற்போது சரவணனின் அப்பா படிக்கிறார். ஆனால் அது சரவணன் சந்தியா என்று தெரிந்ததும் பாதியில் நிறுத்தி விடுகிறார். இதனை கவனிக்கும் சரவணனின் தம்பி அந்த நியூஸ் பேப்பரை வாங்கி பார்க்கிறார். அதில் சந்தியா மற்றும் சரவணின் போட்டோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். இதை மட்டும் சரவணனின் தம்பி சபையில் போட்டுடைத்தால் சிவகாமி அம்மாள் செம்ம டென்ஷன் ஆகிவிடுறார்.
ஏனென்றால் வேலை சொல்லி கொடுக்க கடைக்கு அழைத்துச் செல்வதாக சொல்லி தான் சரவணன் சந்தியாவை தென்காசி அழைத்துச் சென்றார். இப்போது நியூஸ் பேப்பரில் வந்த செய்தியைப் பார்த்தால் எதுக்காக தென்காசி போனீங்க அப்படின்னு ஒரு பெரிய பிரச்சனையையே கிளப்பி விடுவார். இதற்கு முன்னாடி நடந்த எபிசோட்டிலேயே சந்தியா, சரவணன் டிரஸில் எண்ணெய் கறை எப்படி வந்தது? என அர்ச்சனா ஆவலுடன் கொளுத்தி போட்டார். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இப்போது சரவணன் தம்பி பற்றவைத்தால், அதில் அர்ச்சனா எண்ணெய் ஊற்றி வீட்டில் பெரிய சண்டையை உருவாக்கி விடுவார்கள். இதை எல்லாம் வரப்போகும் எபிசோட்களில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.