Home /News /entertainment /

இந்த சீனை எத்தனை சீரியல்ல தான் வைப்பீங்க - ட்ரோல் செய்யப்படும் விஜய் டிவி சீரியல்!

இந்த சீனை எத்தனை சீரியல்ல தான் வைப்பீங்க - ட்ரோல் செய்யப்படும் விஜய் டிவி சீரியல்!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

பாரதி கண்ணம்மா சீரியலில் சீலிங்கில் சுற்றிக்கொண்டிருக்கும் ஃபேன் கீழே விழுவது போன்ற காட்சி ராஜா ராணி சீரியலிலும் ஒளிபரப்பானது.

    சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களும் ட்ரோல் செய்யப்படுவது புதிதல்ல. அதில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுவது விஜய் டிவியின் ஒரு சில குறிப்பிட்ட சீரியல்கள் தான். பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பல ஆண்டுகளாக டைரக்டர் விதவிதமாக ஒப்பேற்றி வருகிறார் என்று பார்வையாளர்கள் கலாய்த்து வருகின்றனர். அதே வரிசையில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்ட சீரியல் முத்தழகு. இந்த இரண்டுமே விஜய் டிவி சீரியல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது அந்த வரிசையில் ரசிகர்களை பெரிதாக கவர்ந்த ராஜா ராணி 2 சீரியலும் இடம்பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்கள் ட்ரோல் செய்யும் அளவுக்கு சீரியலில் அப்படி என்ன நடந்தது? ராஜா ராணி 2 சீரியல் ஸ்டார் ப்ளிஸ்ஸில் ஒளிபரப்பான ‘தியா ஆர் பாடி ஹம்’ என்ற இந்தி சீரியலின் மொழியாக்கம் என்பது அனைவரும் அறிந்ததே.

    இதே இந்தி சீரியல், ‘என் கணவன் என் தோழன்’ என்று தமிழில் டப்பிங் செய்யப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் இதே விஜய் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி, அதுவும் மிகப்பெரிய ஹிட்டானது. ஆனால் தமிழில் சில மாதங்களுக்கு முன் ராஜா ராணி 2 சீரியல் தொடங்கப்பட்டபோது, ஒரு சிலர் இதே சீரியல் ஏன் மறுபடி ஒளிபரப்பாகிறது என்று கூறினாலும் பலரும் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

    கலர்ஸ் தமிழில் இருந்து விஜய் டிவிக்கு நடிகர் சித்து இந்த சீரியல் மூலம் அறிமுகமானார். விஜய் டிவியின் ஆஸ்தான நாயகியான, ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா நாயகியாக நடித்து வந்தார். சீரியலின் ஆரம்ப வாரங்கள் பார்வையாளர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இடையில் ஆல்யா மானசா இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக வேறு ரியா விஸ்வநாதன் என்ற மாடல் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சந்தியா பாத்திரத்தில் இவர்தான் நிரந்தரமாக நடிப்பார் என்றும் உறுதிசெய்யப்பட்டது.

    ஏற்கனவே தமிழில் டப் செய்யப்பட்டு பார்த்துவிட்டதால், ராஜா ராணி பாகம் இரண்டின் கதை இது தான், அதுமட்டுமின்றி காட்சிகளும் இப்படித்தான் இருக்கும் என்று பலருக்கும் தெரியும். இருந்தாலும் டைரக்டர் ஜவ்வு மிட்டாய் போல இழுவையாக்க, ஒரு சில காட்சிகளை வைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி வேறு சில சீரியல்களில் இருக்கும் அதே காட்சிகளை ரிப்பீட் மோடில் ஒவ்வொரு சீரியலுக்கும் வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

    Meena: நடிகை மீனா கர்ப்பம்? வைரலாகும் வீடியோ!

    பாரதி கண்ணம்மா சீரியலில் சீலிங்கில் சுற்றிக்கொண்டிருக்கும் ஃபேன் கீழே விழுவது போன்ற காட்சிகள் இரண்டு முறை வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அதே போன்ற ஒரு காட்சி ராஜா ராணி சீரியலிலும் ஒளிபரப்பானது. இதைப் பார்த்து தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    பாகுபலி 2 சாதனை உடைப்பு - வசூலை அள்ளும் கேஜிஎப் சேப்டர் 2!

    எந்த சீரியலிலும் கதையே கிடையாது, ஆனால் எதையோ வைத்து சீரியலை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோலத்தான் இந்த ஃபேன் கழன்று விழும் காட்சியும் ஒவ்வொரு சீரியலிலும் மறக்காமல் இடம்பெற்று விடுகிறது என்று ரசிகர்கள் பலவிதமாக ராஜாமணிக்கு சீரியலை கிண்டல் செய்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி