ராஜா ராணி 2 : ரொமான்ஸ் சீனுக்குள் புகுந்த ஆல்யா மானசாவின் கணவர் - கவனம் பெறும் வீடியோ

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலின் புரமோ வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியல் மூலம் ஆல்யா மானஷா - சஞ்சீவ் ஜோடி பிரபலமானது. இந்த தொடரின் மூலம் இவர்களுக்கு மிகவும் பிரபலமான சீரியல் ஜோடிகள் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

  மேலும் சீரியலைத் தாண்டி நிஜத்திலும் காதல் திருமணம் செய்து கொண்ட ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு ஐலா சையத் என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த பின் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வந்த ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். இத்தொடரில் அவருக்கு ஜோடியாக திருமணம் தொடரின் நடிகர் சித்து நடிக்கிறார். இத்தொடர் சீரியல் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியல் புரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. சித்து - ஆல்யா மானஷா இடையேயான ரொமான்ஸ் காட்சிக்கு இடையே விளையாட்டாக புகுந்த ஆல்யா மானஷாவின் கணவர் சித்துவை கன்னத்தில் அடிக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.   
  View this post on Instagram

   

  A post shared by paapuslub (@paapuslub)


  முன்னதாக ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஆல்யாவின் கணவர் திடீரென விசிட் அடித்த வீடியோவும் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: