• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Raja Rani 2: சந்தியாவை புரிந்துக் கொள்ளும் சிவகாமி - அர்ச்சனா ஆட்டம் முடிவுக்கு வருமா?

Raja Rani 2: சந்தியாவை புரிந்துக் கொள்ளும் சிவகாமி - அர்ச்சனா ஆட்டம் முடிவுக்கு வருமா?

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

அர்ச்சனா ஏதாவது செய்ய வேண்டுமே என நினைத்தவாறு, ‘இந்த சேலை வெறும் 200 ரூபாய் தானா’ என பிரச்னையை ஆரம்பிக்கிறாள்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ராஜா ராணி சீரியலில் சந்தியாவை மாமியார் சிவகாமி புரிந்துக் கொண்டதாக சமீபத்திய ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலுக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தன் மகன் சரவணனுக்கு படிக்காத பெண் வேண்டும் என சிவகாசி தேட, நல்ல பையன் என்ற காரணத்தால் சந்தியா படிக்காதவள் என பொய் சொல்லி கல்யாணம் செய்து வைத்து விடுகின்றனர். ஆனால் அவள் பல்கலைக்கழக அளவில் தேர்ச்சி பெற்றது பின்னர் தெரிய வருகிறது. இதனால் மாமியார் சிவகாமி சந்தியா மீது மிகுந்த கோபத்தில் இருக்க, போதாக்குறைக்கு அர்ச்சனாவும் தன் பங்கிற்கு அவ்வப்போது எதையாவது கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறாள்.



    இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், சந்தியாவின் அண்ணன் அமெரிக்காவிலிருந்து சீர் வரிசை அனுப்பியிருக்கிறார். இதை ஒவ்வொருவருக்காக எடுத்துக் கொடுக்கிறாள் சந்தியா. இதைப் பார்க்கும் அர்ச்சனா ஏதாவது செய்ய வேண்டுமே என நினைத்தவாறு, ‘இந்த சேலை வெறும் 200 ரூபாய் தானா’ என பிரச்னையை ஆரம்பிக்கிறாள். எல்லாரும் மேலும் கீழும் பார்க்க, அது 200 டாலர், அப்படியென்றால் நம்மூர் மதிப்பில் 15,000 ரூபாய் என தெரிய வருகிறது. ‘ஓ நம்ம கிட்ட காசு இல்ல, அவங்கக் கிட்ட இருக்குதுன்னு காட்றாங்களா’ என கோபமாகிறார் சிவகாமி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பின்னர் அமெரிக்காவிலிருந்து சந்தியாவின் அண்ணி ஃபோன் செய்து, ‘எல்லாருக்கும் பிடிச்சிருக்கா, என்ன சொன்னாங்க உங்க வீட்ல’ எனக் கேட்கிறார். அதற்கு ‘இங்க அத்தை, மாமா எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு’ என பிரச்னை எதுவும் சொல்லாமல் மறைக்கிறாள் சந்தியா. இதைப் பார்த்த சிவகாமி, “இது தாங்க ஒரு வீட்டுக்கு வாழ வந்த மருமகளுக்கு இருக்க வேண்டிய நல்ல குணம்” என்கிறார்.

    சிவகாமி மனதில் சந்தியா இடம் பிடித்து விட்டாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: