• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Raja Rani 2: புதிய சாதனை படைத்த ராஜா ராணி 2 சீரியல்!

Raja Rani 2: புதிய சாதனை படைத்த ராஜா ராணி 2 சீரியல்!

ராஜா ராணி 2 சீரியல்

ராஜா ராணி 2 சீரியல்

சித்துவின் காதலியும் நடிகையுமான ஸ்ரேயா அஞ்சன் அவருக்கு ஒரு இனிமையான வாழ்த்தைத் தெரிவித்தார்

  • Share this:
    அக்டோபர் 12 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியல் சமீபத்தில் 100 அத்தியாயங்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. இதற்காக கதாநாயகனாக நடிக்கும் சித்து, தனது சமூக ஊடகத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    நிகழ்ச்சியின் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் முதல் பெரிய மைல்கல்லால் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதோடு இதனை ‘ராஜா ராணி 2’ குழு எளிமையாக கொண்டாடியது.

    தேசிங்கு பெரியசாமி – நிரஞ்சனிக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!



     




    View this post on Instagram





     

    A post shared by Sidhu (@sidhu_sid_official)






    ரசிகர்களிடமிருந்து வரும் செய்திகளின் வீடியோவைப் பகிர்ந்த சித்து, “இதுக்கு மேல ஓரு ஆர்டிஸ்ட்டுக்கு என்ன வேணும்? என் அன்பான நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரையும் நான் நேசிக்கிறேன். என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்.
    வாய்ப்பளித்த பிரவீன் பென்னெட் அண்ணா மிக்க நன்றி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

    சித்துவின் காதலியும் நடிகையுமான ஸ்ரேயா அஞ்சன் அவருக்கு ஒரு இனிமையான வாழ்த்தைத் தெரிவித்தார். “இதற்காக கடினமாக உழைத்தாய். வாழ்த்துக்கள் பாப்பா.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ராஜா ராணி 2-ல் சித்து (சரவணனாக), ஆல்யா மனசா (சந்தியா சரவணன் ஐ.பி.எஸ்), பிரவீனா (சிவகாமியாக), சைவம் ரவி (சுந்தரம்), பாலாஜி தியாகராஜன் தயாளன் (செந்திலாக), வி.ஜே.அர்ச்சனா (அர்ச்சனா செந்தில்) உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: