இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் வெளியான ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ பாடலான என்ஜாயி எஞ்சாமி பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை யூ-ட்யூபில் 42 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல் தொடங்கி மீம்ஸ் வரை எங்கும் ’என்ஜாயி எஞ்சாமி’ ஃபீவர் தான். தற்போது இந்தப் பாடல் பிரபல சீரியல் நடிகையையும் விட்டு வைக்கவில்லை.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா என்ற ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி முதல் சீசனில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அய்லா சையத் என்ற மகள் இருக்கிறார்.
சமீபத்தில் அய்லாவுக்கு முதல் பிறந்தநாள் வந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார் ஆல்யா மானசா. அந்தப் படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழையைப் பொழிந்தனர். இந்நிலையில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்கு கிராமத்து ஸ்டைலில் புடவை கட்டி ராஜா ராணி சீரியலில் தனக்கு கொழுந்தனாராக நடிப்பவருடன் நடனமாடியிருக்கிறார் ஆல்யா.
இந்த நடனத்தை தனது மகள் அய்லாவின் முதல் பிறந்த நாளுக்கு டெடிகேட் பண்ணுவதாகவும், அதோடு தமது 3 மில்லியன் ஃபாலோயர்களுக்கு நன்றி எனவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆல்யாவின் இந்த நடன வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்