கன்னடம் , தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் வெளியான காந்தாரா திரைப்படம் இந்தியாவைத் தாண்டி உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றது.
மேலும் "கந்தாரா" திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதற்காக தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, ' நம்பிக்கைக்குரிய நடிகருக்கான" விருதை வென்றார்.
நாட்டில் புதைந்து கிடக்கும் கலைகளை திரைப்படங்களில் வெளிப்படுத்தி அதற்கு அங்கீகாரம் கொடுக்க முயல்கின்றனர்.
அதேபோல திரைப்படங்களில் இருக்கும் தனித்துவ காட்சிகளை சின்னத்திரையில் உள்ள கலைஞர்கள் நடித்து திரைப்படத்திற்கான வாய்ப்புகளை பெறுகின்றனர்.
தற்போது அதிக மக்களின் ஃபேவரைட் ஷோவாக இருந்து வரும் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் வாரந்தோறும் கோமாளிகள் எதாவது ஒரு திரைப்படக் கதாபாத்திரத்தை ஏற்று அவர்களை போலவே பாடி லாங்குவேஜ் செய்வது வழக்கம்.
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் நடிகர் புகழ், காந்தாரா படத்தில் வரும் பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர் போன்று வேடம் அணிந்து வந்தார்.
திரைப்படத்தில் எப்படி ரிஷப் ஷெட்டி மக்களை தனது நடிப்பால் உறையவைத்தாரோ அதே போன்ற ஒரு நடிப்பை புகழ் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் பஞ்சுருளி தெய்யம் நடிகர்கள் போல மேக்கப் போடும் வீடியோவை புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதில் அந்த உருவத்தை கொண்டுவர 4 மணி நேரம் ஆனது என்று கூறியதோடு தனக்கு மேக்கப் போட்ட நபருக்கும் பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
மேலும் அவரது பதிவில் "இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு. மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பத்தான் புரியுது. மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.