Pugazh: 'காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலிருந்து விலகிய புகழ்... காரணம் என்ன தெரியுமா?

புகழ்

ஞாயிறன்று ஒளிபரப்பான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் இனி புகழ் கலந்து கொள்ள மாட்டார், அவர் திரையுலகில் பிஸியாகிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலிருந்து புகழ் விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

    விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. சமையலுடன் சேர்ந்து நகைச்சுவையும் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமே தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. தற்போது குக் வித் கோமாளி பிரபலங்கள் இடம்பெறும், 'காமெடி ராஜா கலக்கள் ராணி' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

    தற்போது இந்த நிகழ்ச்சியிலிருந்து புகழ் விலகியுள்ளார். ஞாயிறன்று ஒளிபரப்பான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் இனி புகழ் கலந்து கொள்ள மாட்டார், அவர் திரையுலகில் பிஸியாகிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு அரங்கத்தில் கைதட்டல்கள் எழுந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    அதனைத் தொடர்ந்து புகழ் பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் "அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? கண்டிப்பாக அனைவரும் நன்றாக இருப்பீர்கள். உங்களுடைய ஆதரவினால் எனக்கு ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளன. ஆகையால் என்னால் 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. கண்டிப்பாக சீக்கிரமாக வந்து கலந்து கொள்வேன். ஒரு சின்ன இடைவெளி தான். படம் முடிந்தவுடன் வந்துவிடுவேன். சீக்கிரமாகவே சந்திக்கிறேன். கண்டிப்பாக 'வலிமை'யுடன் வந்து உங்களை மீட் பண்றேன்" எனத் தெரிவித்திருந்தார் புகழ்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: