விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட புகழ் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற புகழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் நடித்திருந்தார். என்ன சொல்ல போகிறோய், எதற்கும் துணிந்தவன், யானை ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது சந்தானத்துடன் இணைந்து ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் Mr.Zoo Keeper என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
மேலும் நான்கு படங்களிலும் கமீட் ஆகியுள்ளார் புகழ். சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகிறார். புகழ் செப்டம்பர் மாதம் பென்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பென்சியுடன் காமெடி ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார்.
also read : ’ரோஜா' சீரியல் கதாநாயகி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
இந்நிலையில் புகழின் பிறந்தநாளை முன்னிட்டு புகழின் மனைவி பென்சி புகழுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் புகழ் வெளியிட்டுள்ளார். வீடியோவில் ‘நான் தூங்கிட்டு இருக்கன்னு நினைச்சு வெளில சத்தமா பர்த்டே சர்ப்ரைஸுக்கு ரெடி பண்றாங்க.. ஆனா நான் தூங்கல.. திருமணத்துக்கு அப்பறம் சர்ப்ரைஸ்னா இப்படி தான் இருக்குமோ’ என மனைவி கலாய்க்கிறார்.
புகழுக்கு பர்த்டே சர்ப்ரைஸாக அழகிய நாய்க்குட்டியை பரிசாக கொடுக்கிறார் பென்சி. புகழ் அந்த நாய்க்குட்டியை வம்பிழுப்பது யூடியூப் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் பர்த்டே சர்பிரைஸின் போது சிவாங்கி புகழுக்கு வாழ்த்து கூற வீடியோ காலில் இணைகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற சக்தி, புகழ் வீட்டில் சர்பிரைஸ் பார்ட்டிகாக வந்துள்ளார். சக்தி மற்றும் புகழ் பர்த்டே சர்பிரைஸ் கலாய்த்து பேசிக்கொள்ளும் காட்சிகளும் வீடியோவில் இருக்கிறது.
சினிமாவில் செம்ம பிசியாக இருந்தாலும், யூடியூபில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். புகழ் பகிர்ந்த இந்த பர்த்டே சர்பிரைஸ் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending Video, Vijay tv