Home /News /entertainment /

ரசிகர்களுக்காக மீண்டும் அவருடன் இணையும் விஜய் டிவி பிரியங்கா!

ரசிகர்களுக்காக மீண்டும் அவருடன் இணையும் விஜய் டிவி பிரியங்கா!

விஜய் டிவி பிரியங்கா

விஜய் டிவி பிரியங்கா

பிரியங்கா, ராஜூ இருவருமே விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகள் தான். பிரியங்கா பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர் .

  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றது. இறுதியாக ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் என 5 பேர் இருந்தனர். இதில் பிரியங்கா அல்லது ராஜூ தான் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் செல்லுவார்கள் என சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது.

  இதையடுத்து கடந்த 16ம் தேதி நடந்த பிரம்மாண்ட இறுதி நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன், ராஜூவை வெற்றியாளராக அறிவித்தார். இவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா இரண்டாம் இடத்தையும், பாவனி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களான இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரைச்செல்வி, அக்ஷரா, நிரூப், சிபி ஆகியோரிடம் ராஜூ பழகிய முறையும், தப்பு யார் செய்தாலும் முகத்திற்கு நேராக விமர்சிக்கும் குணமும் அவரை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட காரணமாக அமைந்தது.

  இதையும் படிங்க.. தாலி சென்டிமென்ட் போதும்.. வெற்றிக்கு தண்டனை வாங்கி தர போகும் அபிநயா!

  பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளித்திரையில் ராஜூவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதை விட மகிழ்ச்சியான செய்தி ஒன்று கசிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல நண்பர்களாக பழகி வந்த பிரியங்கா, ராஜூ இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து விஜய் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இதையும் படிங்க.. சின்னத்திரை மீரா ஜாஸ்மின்.. யாரடி நீ மோகினி புகழ் நக்ஷத்ரா சொன்ன விஷயம்!

  விஜய் தொலைக்காட்சியில் எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ‘பிக்பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சி கிராண்டாக நடத்தப்படும். இதில் அந்தந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற பிரபலங்களின் ஆடல், பாடல், காமெடி போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

  பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக அதன் போட்டியாளர்கள் விரைவில் ஒன்று இணைய உள்ளனர். டைட்டில் வின்னர் ராஜூ, பிரியங்கா, சிபி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட மக்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5 செலிபிரிட்டிக்கள் அனைவரும் ‘பிக்பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சிக்காக ஒன்றிணைய உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விரைவில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ராஜூ, பிரியங்கா இருவரும் ஒன்றாக இணைந்து நடனமாட இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.

  பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரியங்கா, ராஜூ இருவரும் நடன ஒத்திகையின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  பிரியங்கா, ராஜூ இருவருமே விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகள் தான். பிரியங்கா பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றால், ராஜூ சீரியல் நடிகராக மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியின் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்துள்ளார். 'கனா காணும் காலங்கள்- கல்லூரி காலம்' உள்ளிட்ட சீரியல்களில் நடிகராக அறிமுகமான ராஜூ, 'சரவணன் மீனாட்சி' ‘ஆண்டாள் அழகர்’ ஆகிய சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்போது இருவரும் இணைந்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பட்டையைக் கிளப்ப போவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  இதற்கு முன்னதாக விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ராஜூ, பிரியங்கா, சிபி, மதுமிதா, நிரூப் ஆகியோர் பங்கேற்றது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Anchor Priyanka, Vijay tv

  அடுத்த செய்தி