Vijay TV Priyanka: எமோஷனலாக்கிய ரசிகர்... ட்ரெண்டிங்கில் பிரியங்காவின் பிறந்தநாள் வீடியோ!

பிரியங்கா தேஷ்பாண்டே

அடுத்த நாள் காலையில் பூங்கொத்துகளும், பரிசுகளும் பிரியங்காவுக்கு வருகின்றன.

  • Share this:
    தனது பிறந்தநாள் வீடியோவை விஜய் டிவி பிரியங்கா யூ-ட்யூபில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

    விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் வி.ஜே.பிரியங்கா. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார். ஜோடி, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் என பிரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம். முக்கியமாக நிகழ்ச்சியில் தன்னை யார் என்ன சொன்னாலும் அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வார்.

    டிவி மட்டுமல்லாமல் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதனை தற்போது வரை 1.16 மில்லியன் பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது தனது பிறந்தாள் வீடியோவை அதில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் அந்த வீடியோ யூ ட்யூப் ட்ரெண்டிங்கிலும் இடம் பெற்றுள்ளது.

    இரவு 12 மணிக்கு வீட்டில் அனைவரும் வாழ்த்துகிறார்கள். விஜய் டிவி தீனா ஃபோன் செய்து ‘நீ கேஷுவலா தூங்கு’ என்கிறார். பின்னர் ‘உனக்கு இன்னைக்கு பர்த்டே’ என்கிறார். நவீன் ஃபோன் செய்து, ரஜினி, கமல், விஜய், அஜித் குரலில் பிரியங்காவை வாழ்த்துகிறார்.



    பின்னர் அடுத்த நாள் காலையில் பூங்கொத்துகளும், பரிசுகளும் பிரியங்காவுக்கு வருகின்றன. லண்டனில் இருந்து ஸ்ரீ என்கிற பிரியங்காவின் ரசிகர் ஒருவர், அவர் தனது அப்பாவுடன் இருக்கும் படத்தை பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். பின்னர் நண்பர்கள் வீடியோ காலில் பிரியங்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள்.

    பிரியங்காவின் வீட்டுக்கு வரும் தீனா அவருடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் லைவ் செல்கிறார். இப்படியாக அந்த நாள் முழுவதும் தான் அனுபவித்த விஷயங்களை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் பிரியங்கா. இந்த வீடியோ ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: