Vijay TV Priyanka: விஜய் டிவி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதி - யூடியூபில் ட்ரெண்டாகும் வீடியோ

பிரியங்கா

அவன் அவன் செய்ற தப்புக்கு அவன் அவன் தான் தண்டனை அனுபவிக்கணும். நான் பண்ணதுக்கு தான் இப்போ அனுபவிக்கிறேன்.

  • Share this:
    விஜய் டிவி பிரியங்கா தான் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது யூ-ட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.

    விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் வி.ஜே.பிரியங்கா. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார். ஜோடி, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் என பிரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம். முக்கியமாக நிகழ்ச்சியில் தன்னை யார் என்ன சொன்னாலும் அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வார்.

    டிவி மட்டுமல்லாமல் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதனை தற்போது வரை 1.16 மில்லியன் பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



    கடந்த மாதம் 12-ம் தேதி பிரியங்காவுக்கு வயிறு கோளாறு ஏற்பட, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு எடுத்த வீடியோவை தான் தனது சேனலில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ‘என்ன கருமத்த சாப்பிட்டேனு தெரியல. பேதி ரெண்டு மூனு தரவ இல்ல, 15 தடவைக்கு மேல போய்ட்டு இருக்கு. ஆஸ்பத்திரில ஊசி, குளுக்கோஸ்னு அடிச்சு நவத்தீட்டு இருக்காங்க. எவ்வளவு ஊசிப் போட்ருக்காங்கனு நீங்களே பாருங்கனு’ கூறியுள்ளார்.

    மேலும் தொடரும் அவர், ‘அவன் அவன் செய்ற தப்புக்கு அவன் அவன் தான் தண்டனை அனுபவிக்கணும். நான் பண்ணதுக்கு தான் இப்போ அனுபவிக்கிறேன். சாப்பிடுறது தப்புங்களா? தப்பில்ல.. ஆனா என்ன சாப்பிடுறோம், அத எங்க சாப்பிடுறோம்ங்கறது தான் முக்கியம்’ என்கிறார்.

    பின்னர் இறுதியாக தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்வதையும் அந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: