விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்கா மற்றும் மணிமேகலை யூ-ட்யூபில் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் யூ-டியூப் அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த ஊடகம் சரியான உள்ளடக்கத்தை கொண்டிருப்பவர்களை ஒரே நைட்டில் பிரபலமாக்கிவிடுகிறது.
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் அதிக அளவில் இந்த வீடியோ தளத்தை பயன்படுத்துகின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமெனில் டிவி நட்சத்திரங்கள் மற்ற துறைகளை விட தங்களது யூ-டியூப் சேனல்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள்.
குறிப்பாக, விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா சப்பாத்தி செய்வது எப்படி? எப்படி சாப்பிடுவது? போன்ற வேடிக்கையான வீடியோக்கள் மூலம் மாதம் சுமார் ரூ .7 லட்சம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக டயாரியாவால் அடிக்கடி பாத்ரூம் சென்ற பிரியங்காவின் வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது. அவர் எந்த வீடியோவை பதிவிட்டாலும் அது ரசிகர்களின் கவனத்தை எளிதில் பெற்று விடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதேபோல், மற்றொரு வி.ஜே. மணிமேகலை தனது கணவர் ஹுசைனுடன் சேர்ந்து, பல்வேறு இடங்களுக்கு சென்று VLogs வீடியோக்களை பதிவிட்டு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களையும் பெற்றுள்ளார். அவருக்கு யூடியூப் மூலம் அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறது.
தங்கள் படங்களை யூ-ட்யூபில் பதிவிட்டு பார்வைகள் மூலம் சராசரி வருமானம் பெற சிறு படத் தயாரிப்பாளர்கள் / இயக்குநருக்கும் இது பெரும் வரபிரசாதமாக மாறியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv