சின்னத்திரையில் பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தயாராகி வருகின்றன. அதில் விஜய் டிவி-யின் பொன்னி சீரியலும் ஒன்று.
இதில் வைஷு சுந்தர் மற்றும் சபரி நாதன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வருண் உதய், கார்த்திக் சசிதரன், ஸ்ரீதேவி அசோக், யுவன்ராஜ் நேத்ரன், ஷமிதா, பார்கவி ஈஸ்வரமூர்த்தி மற்றும் தர்ஷிகா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
பெங்காலி தொலைக்காட்சி தொடரான காட்சோராவின் ரீமேக்காக பொன்னி ஒளிபரப்பாகவிருக்கிறது. அப்பா-மகள் உறவை மையப்படுத்தி இந்த சீரியல் இயக்கப்படவிருக்கிறது. ஹீரோயின் பொன்னி பொறுப்புள்ள மகள். தன் தந்தைக்காக திருமணம் செய்துக் கொள்ள முன்வரும் பெண்ணின் கதை. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், தனது திருமண ஏற்பாடுகளை தானே செய்கிறாள்.
View this post on Instagram
சிங்கிள் பெற்றோராக, உயிர் பிழைக்க கடுமையாக போராடுகிறார் பொன்னியின் தந்தை. எனவே இந்த சீரியல் சிங்கிள் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் திருமணம் எல்லா தடைகளையும் தாண்டி நடந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை எட்டுவதே இதன் கதைக்களம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv