Pandian Stores: காதலரை மணமுடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

Pandian Stores: காதலரை மணமுடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

சந்தன்குமார் - கவிதா கவுடா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்திருந்த கவிதா கவுடாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன்- தம்பி பாசம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இத்தொடரின் கதை உருவாக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களி டையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்து வருகிறது.

இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இத்தொடரில் ஹேமாவுக்கு முன்பாக மீனா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கவிதா கவுடா. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அத்தொடரிலிருந்து விலகினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடர் மூலம் பிரபலமான இவர் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

கவிதா கவுடாவிற்கும் அவரோடு லஷ்மி பிரம்மா தொடரில் நாயகனாக நடித்த சந்தன்குமார் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதற்கான புகைப்படங்களையும் இருவரும் தங்களது சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.



 




View this post on Instagram





 

A post shared by K A V I T H A (@iam.kavitha_official)






மேலும் சந்தன் குமார் - கவிதா கவுடா ஜோடி குக் வித் கிறுக்கு கன்னட நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: