Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்த பிரபல சீரியல் நடிகை

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கேரக்டருக்கு ஜோடியாக நடிகை தீபிகா இணைந்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன்- தம்பி பாசம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இத்தொடரின் கதை உருவாக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களி டையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்து வருகிறது.

இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அந்த கேரக்டரில் நடிக்க காவ்யா அறிவுமணி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது இன்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் திருமணமாகாமல் இருக்கும் கடைக்குட்டியாக வலம் வரும் கண்ணன் (சரவண விக்ரம்) கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை தீபிகா இணைந்துள்ளார். அவர் ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பார் என தெரிகிறது.



 




View this post on Instagram





 

A post shared by Vj Deepika (@vj_deepika_official)






ஏற்கெனவே சரவண விக்ரமிற்கு ஜோடியாக சத்யசாய் கிருஷ்ணன், வைஷாலி தனிகா உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் தற்போது தீபிகா இணைந்துள்ளார். இவராவது சரவண விக்ரமின் ஜோடியாக தொடர்ந்து நடிப்பாரா என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: