Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சன் டிவி நடிகர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கடைக்குட்டி கண்ணனுக்கு இதுவரை ஜோடி இல்லாமல் இருந்தது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதுவரவாக நடிகர் ஒருவர் இணைந்திருக்கிறார்.

    கூட்டுக் குடும்ப உறவுகளை மையப்படுத்தி விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் விதமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கும் நிலையில், கடைக்குட்டி கண்ணனுக்கு இதுவரை ஜோடி இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இந்த கேரக்டருக்கும் ஜோடி ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்நிலையில் ஐஸ்வர்யாவுடன் நெருங்கி பழகும் பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் வசந்த் வசியை புதுவரவாக இணைத்துள்ளனர். இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சன் டிவி-யில் ஒளிபரப்பாகிய அக்னிநட்சத்திரம் ஆகிய சீரியலில் நடித்தவர். கண்ணன் - ஐஸ்வர்யா காதலுக்கு இவர் வில்லனாக இருப்பார் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: