பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஒளிபரப்பு நேரம் நீட்டிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஒளிபரப்பு நேரம் நீட்டிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 8:41 PM IST
  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.கூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடருக்கு ரசிகர்களும் ஏராளம்.

லாக்டவுனுக்கு பின்னர் அரை மணி நேரமாக இருந்த எபிசோட்கள் ஒரு மணி நேரமாக மாற்றி சில வாரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதையடுத்து மீண்டும் தற்போது வரும் செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒருமணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக நடிகை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மவுனராகம் தொடர் இந்த வாரத்தோடு முடிவடைய உள்ளதால், அந்த நேரத்தோடு சேர்த்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒரு மணி நேரமாக ஒளிபரப்பப்பட உள்ளது. இதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் விருந்தாக அமிய உள்ளது.

சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுஒருபுறமிருக்க நிஜத்திலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.



இதனால் அவர் மீண்டும் சீரியலுக்கு வருவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. அதற்கு பதிலளித்த நடிகை ஹேமா, குழந்தை பிறந்த பின்னரும் நடிப்புக்கு குட் பை சொல்லமாட்டேன் என்பதை தெரிவிக்கும் வகையில் விரைவில் பாசிட்டிவ்வான செய்தி காத்திருக்கிறது என்று கூறினார்.



இதன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் ஹேமாவே தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading