• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரசவ வலியில் துடிதுடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்... ஓடி வந்து உதவிய கண்ணன்!

பிரசவ வலியில் துடிதுடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்... ஓடி வந்து உதவிய கண்ணன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தனத்திற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அப்போது தனத்தின் அம்மா செய்வதறியாது தவிக்கிறார்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், பிரசவ வலி வந்த தனத்திற்கு கண்ணன் உதவி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

    கண்ணன் திடீர் கல்யாணம், கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த வி.ஜே. தீபிகா மாற்றம், அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த லட்சுமி அம்மா மரணம் என தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பாக நகர்கிறது.

    வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்ட கண்ணன், தனது வீட்டுக்கு எதிரிலேயே குடி வந்ததிலிருந்து இந்த சீரியல் இன்னும் சுவாரஸ்யமாகியிருக்கிறது. இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தனத்திற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அப்போது தனத்தின் அம்மா செய்வதறியாது தவிக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by vijay_serials (@vijay_serials)






    வெளியில் சென்று கண்ணனிடம் இதைக் கூற, அவன் உடனே ஆட்டோ பிடித்து வந்து தனத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். தற்போது இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: