• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாரான பாண்டியன் ஸ்டோர்ஸ்... என்ன விசேஷம் தெரியுமா?

அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாரான பாண்டியன் ஸ்டோர்ஸ்... என்ன விசேஷம் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தனம் மற்றும் மூர்த்திக்கு ஆண் குழந்தை பிறந்ததையொட்டி, குடும்பம் முழுவதுமே கொண்டாட்டமான மனநிலையில் இருந்தது

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அற்புதமான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய மிகக் குறைந்த நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த சீரியல்களில் பாண்டியன் ஸ்டோரும் ஒன்று. ஆனந்தம் திரைப்படத்தின் கதையை சீரியலாக காப்பியடித்து எடுத்துள்ளார்கள் என்று பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே சீரியல் மிகப்பெரிய வெற்றியை பெற்று தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. சமீபகாலமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    பாண்டியன் ஸ்டோரில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கப் போகிறது என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிரடியான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகின. எந்த சூழல் ஏற்பட்டாலும் சகோதரர்களின் அன்பும் பாசமும் மேலோங்கி நிற்கும், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள், அண்ணி என்பவர் அம்மாவிற்கு சமம் ஆகியவற்றுக்கு உதாரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதை அமைந்துள்ளது.

    அவ்வப்போது கதையில் அதிரடியாக பல திருப்பங்கள் ஏற்படும்.‌ தனம் கர்ப்பமாக இருப்பதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் அம்மாவான லக்ஷ்மி அம்மாள் இறப்பும் ஒரே நேரத்தில் மிகப்பெரிய சந்தோஷத்தையும், மிகப்பெரிய துக்கத்தையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியது.லட்சுமி அம்மாளின் இறப்புக்குப் பிறகு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கதைக்களம் மாறி வருகிறது. இந்நிலையில் மற்றுமொரு மிகப்பெரிய மாற்றத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்ற செய்தி உலவி வருகிறது. அடுத்த மாற்றம் என்னவாக இருக்கும் என்று பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அற்புதமான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

    தனம் மற்றும் மூர்த்திக்கு ஆண் குழந்தை பிறந்ததையொட்டி, குடும்பம் முழுவதுமே கொண்டாட்டமான மனநிலையில் இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அடுத்த மகிழ்ச்சியான மாற்றத்தில் தனம் மற்றும் மூர்த்தியின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடக்க இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகின.

    தனத்திற்கு குழந்தை பிறந்த பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மகிழ்ச்சியாக செல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்ததை, சீரியல் குழு முழுமையாகவே நிறைவேற்றப் போகிறது. ஆனால், அதே நேரத்தில் பல்வேறு சிக்கல்களும் உண்டாகப் போவதற்கான அறிகுறிகளும் கடந்த சில எபிசோடுகளில் காணப்பட்டது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    பல ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாத தனத்தின் குழந்தை மீது வீட்டில் இருக்கும் அனைவரும் காட்டும் அதிகமான பாசம், மீனாவுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. பெயர் சூட்டு விழா புகைப்படங்கள் வெளியான போதும், மீனா ஏதாவது குழப்பம் விளைவிக்கலாம் அல்லது வழக்கம் போல சண்டை போடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, முல்லை அதிக நேரம் கதிருடன் செலவிடுவதும், கடை விஷயத்திலும் அதிகம் தலையிடுவது பிரச்சனையாக மாறுகின்றது. இந்த பிரச்சனைகள் இனி பாண்டியன் ஸ்டோர்ஸில் என்ன மாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்தப்போகிறது என்று பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: