Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காதல் திருமணம்!

கவிதா கவுடா திருமணம்

கவிதாவுக்கு தன்னுடன் நடித்த சந்தன்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களிலேயே அந்த நட்பு காதலாக மாறியது.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் முன்பு நடித்து வந்த கவிதா கவுடாவுக்கு திருமணம் நடந்துள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை கவிதா கவுடா. தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இப்போது மீனாவாக நடிக்கும் ஹேமா ராஜ்குமாருக்கு முன்பு, அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    கவிதாவுக்கு தன்னுடன் நடித்த சந்தன்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களிலேயே அந்த நட்பு காதலாக மாறியது. இரு வீட்டாரிடமும் சம்மதம் கிடைக்கவே இந்த காதல் ஜோடிக்கு, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நிச்சயதார்த்த விழா நடந்தது. தற்போது கொரோனா தொற்று அச்சம் நீடித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த காதல் ஜோடியின் திருமண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதையடுத்து கவிதாவின் ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: