2 மாதத்தில் இது சாத்தியமாகியிருக்கிறது - பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மகிழ்ச்சி

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகை மீனாவின் யூடியூப் சேனலுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமிழில் ஹிட் அடித்த இத்தொடர் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இத்தொடரில் நடிக்கும் நடிகர்களுக்கென தனித்தனியே ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்கள் ஆர்மி மற்றும் ரசிகர் பக்கங்களை சமூகவலைதளத்தில் உருவாக்கி தங்களுக்கு பிடித்த கேரக்டர்களை கொண்டாடுகிறார்கள். அதேபோல் இத்தொடரில் நடிக்கும் சுஜிதா தனக்கென தனி யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் படப்பிடிப்பு நடக்கும் இடம், அந்த வீடு எப்படி ஷூட்டிங்கிற்கு குழுவினர் தயாராவார்கள் என்பதையெல்லாம் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமாவும் தனக்கென தனி யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் மீனாவின் யூடியூப் சேனல் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ‘ஹேமாஸ் டைரி’ என்ற அந்த சேனலுக்கு யூடியூப் சார்பில் ‘சில்வர் ப்ளே பட்டன்’ (Silver Play Button) கிடைத்துள்ளதாக நடிகை ஹேமா தனது சேனலில் தெரிவித்துள்ளார். 1 லட்சம் சப்ஸ்கிரைபர்களைப் பெறும் சேனலுக்கு யூடியூப் சார்பில் இந்த சில்வர் ப்ளே பட்டன் என்ற அங்கீகாரம் கொடுக்கப்படும்.இதுகுறித்து நடிகை ஹேமா கூறுகையில்,  “ஹேமாஸ் டைரி சேனலுக்கு யூடியூப் பிளே பட்டன் கிடைத்திருக்கிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஹேமாஸ் டைரி சேனலை இதுவரை 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். இதற்காக அனைவருக்கும் நன்றி. என்னுடைய வீடியோக்கள் உங்களுக்கு ரசிக்கும்படியாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறீர்கள். மேலும் நீங்களும் என்ன மாதிரியான பயனுள்ள வீடியோக்கள் அப்லோட் செய்யலாம் என்று தெரிவிக்கலாம். அதன்மூலம் இன்னும் நல்ல வீடியோக்களை நாங்கள் உருவாக்கி வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: