விஜய் டிவி-யில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த ஒரு வாரமாக அதன் ரசிகர்களை கண்ணீரில் மிதக்க வைத்துள்ளது.
அண்ணன் - தம்பிகளின் பாசம் மற்றும் கூட்டு குடும்பத்தின் கலகலப்பான வாழ்க்கையை சின்னத்திரை ரசிகர்களின் கண் முன் காட்டும் இந்த சீரியலின் கடந்த சில எபிசோட்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எதிர்கொள்ளும் இக்கட்டான நெருக்கடிகளையும், சோகத்தையும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸின் சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் ஆகிய நால்வரின் தாயான லட்சுமி திடீரென்று இறந்து விடுகிறார்.
கண்ணன் - ஐஸ்வர்யா காதல் திருமணத்தால் நொடிந்து போகும் குடும்பம் வேதனையில் தவிக்கும் போது, கடைசி மகனான கண்ணன் செய்த காரியத்தை நினைத்து மனம் வருந்தும் லட்சுமி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்படும் லட்சுமி, சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி, பழையபடி அனைவருடனும் கலகலப்பாக பேசுகிறார். இந்நிலையில் லட்சுமியின் உயிர் இரவு தூக்கத்திலேயே பிரிந்து விடுகிறது.
காலை அவரை எழுப்ப முயலும் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவர் வந்து பார்த்து விட்டு லட்சுமி தவறிவிட்டதாக கூறும் தகவல் பேரிடியாக இருக்கிறது. பின் உறவினர்கள் லட்சுமியின் இறுதி சடங்கிற்கான வேலைகளை கவனிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியே மனைவியுடன் தங்கி இருக்கும் கண்ணன் வேலை நிமித்தமாக திருச்சிக்கு சென்றுள்ள நிலையில், போனையும் ஊரிலேயே விட்டு செல்வதால் அவனுக்கு யாராலும் தகவல் சொல்ல முடியவில்லை. ஊர் பெரியவர்கள் நேரம் ஆவதால் லட்சுமி அம்மாவின் உடலை எடுக்க சொல்கிறார்கள். ஆனால் கண்ணன் வராமல் உடலை எடுக்க அவனது குடும்பத்தினர் மறுக்க, அவன் வருவதற்குள் சில சடங்குகளையாவது செய்து விடுங்கள் என்று நிர்பந்திக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வேறு வழியின்றி உறவின் வழி இறுதிசடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் லட்சுமி அம்மாவிற்கு செய்யப்படுவது போல கடைசி எபிசோட் ஒளிபரப்பானது. மாலை 6 மணிக்குள் லட்சுமி அம்மாவின் உடலை எடுக்க ஊர் பெரியவர்கள் கெடு விதித்த நிலையில், கண்ணன் கடைசியாக தாய் முகத்தை பார்ப்பான என்ற ஏக்கம் ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக வெளியாகி இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸின் லேட்டஸ்ட் ப்ரமோ.
ப்ரோமோ வீடியோவில் ஊர் திரும்பும்
கண்ணன் வழயில் ஒட்டப்பட்டிருக்கும் தாயின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து இறப்பு செய்தியை தெரிந்து அழுது கொண்டே வேகமாக செல்கிறான். வழியில் அவனை பார்க்கும் மனைவி
ஐஸ்வர்யா, அத்தை உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று விட்டதாக தகவல் கூற, அதை கேட்டு கதறியபடியே அங்கு செல்கிறான். அங்கு அவர் செல்வதற்கும் மூர்த்தி தாயின் சிதைக்கு தீ மூட்டுவதற்கும் சரியாக இருக்கிறது. இதை பார்த்து
அம்மா, அம்மா என்று கதறும் கண்ணன், அம்மாவை ஹாஸ்பிடலிலும் என்னை பாக்கவிடல, வீட்லயும் என்ன பாக்கவிடல.. இனிமே அம்மாவை எப்ப பாப்பேன், எப்படி பாப்பேன்" என்று துடிப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.