Pandian Stores: கண்ணனை தலை முழுகிய மூர்த்தி - இழுத்து மூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு கதவு

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மாலையும் கழுத்துமாக, ஐஸ்வர்யாவுடன் காரில் வந்து இறங்குகிறான் கண்ணன். இதைப்பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு பேரதிர்ச்சி.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    4 அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதை தான் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை என முதல் 3 பேரும் திருமணமாகி தங்கள் அம்மாவுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கடைக்குட்டி கண்ணன் விளையாட்டுத்தனம் மிக்கவன்.

    இந்நிலையில் உறவுக்கார பெண் ஐஸ்வர்யாவுக்கும், கண்ணனுக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையே பிரசாந்துடன் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. இதனால் என்ன செய்வதென்று தவித்த ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறுகிறாள். நண்பர்களின் துணையுடன் கோயிலில் வைத்து கண்ணன் - ஐஸ்வர்யா திருமணம் செய்துக் கொள்கின்றனர்.



    இதை பிரசாந்த், ஜீவா, கதிர் என மூவருமே பார்க்கிறார்கள். வீட்டில் வந்து இதை பிரசாந்த் சொல்ல, எங்க கண்ணன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான் என்கிறார்கள். அந்த நேரத்தில் மாலையும் கழுத்துமாக, ஐஸ்வர்யாவுடன் காரில் வந்து இறங்குகிறான் கண்ணன். இதைப்பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு பேரதிர்ச்சி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கஸ்தூரியும், மல்லியும் தனத்தை திட்டி தீர்க்கிறார்கள். அதோடு இனி நீங்கள் நல்லாவே இருக்க மாட்டீர்கள் என சாபம் விடுகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், இதுவரை அமைதியாக இருந்த மூர்த்தி கோவமடைகிறார். ’இனிமேல் உனக்கு நான் அண்ணன் இல்லை’ என தலையில் தண்ணி எடுத்து ஊற்றி, தலை முழுகுகிறார். உன்னை எப்படி எல்லாம் வளத்தேன் என்று கோவத்தில் உடைந்து அழுகிறார். இந்த வீட்டோட ஒட்டு, உறவு, சொந்த பந்தம்ன்னு இனி எதுவும் இல்லை என்கிறார். கண்ணன் அழுதவாறு ’அண்ணே’, எனக் கூப்பிட ’டேய்... இனி ஒரு அடி எடுத்து வச்ச, என்னைய உயிரோட பாக்க முடியாது’ என்கிறார் மூர்த்தி. குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்திருக்க அனைவரையும் வீட்டுக்குள் போக சொல்லி, கதவை இழுத்து மூடுகிறார் மூர்த்தி.

    அடுத்து என்ன நடக்கும் என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: