ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் லட்சுமி அம்மா! மகிழ்ச்சியில் தனம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் லட்சுமி அம்மா! மகிழ்ச்சியில் தனம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மீண்டும் லட்சுமி அம்மா வந்திருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா மீண்டும் வந்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

சமீபத்தில் இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலா இறந்ததாகக் காட்டப்பட்டது. டி.ஆர்.பி-யை குறிவைத்து சுவாரஸ்யத்தை அதிகரிக்க இவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. மற்றொரு புறம் நடிகை ஷீலாவின் மகன் விக்ராந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாமல், ஜீ தமிழின் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதால், அதிருப்தியடைந்த விஜய் டிவி நிர்வாகம் ஷீலாவை சீரியலை விட்டு தூக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்தத் தகவலை மறுத்த ஷீலா, விரைவில் ஒளிபரப்பாகவுள்ள விஜய் டிவி-யின் புதிய சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக தான் நடிக்கவிருப்பதாகக் கூறினார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மீண்டும் லட்சுமி அம்மா வந்திருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by VijayTv Serials (@vijaytvserials._)அதுவும் நெற்றியில் குங்குமம், தலையில் மல்லிகை பூ என வீட்டிற்குள் நடந்து வரும் லட்சுமியை பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறாள் தனம். பின்னர் அது கனவு என்பதை உணர்வதாக அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv