முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரசிகர்களுக்கு தனது மகனை அறிமுகப்படுத்திய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா!

ரசிகர்களுக்கு தனது மகனை அறிமுகப்படுத்திய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா!

ஹேமா ராஜ்குமார்

ஹேமா ராஜ்குமார்

மீனாவாக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார், தனியாக யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா முதன் முதலாக தனது மகனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இறந்துப் போன அம்மாவை கடைசியாகப் பார்க்க கண்ணன் வருவானா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது அதன் ப்ரோமோ வெளியாகி அதற்கான பதிலை தந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். மற்ற கதாபாத்திரங்களை விட நிஜ வாழ்க்கை மனிதர்களைப் போல இயல்பான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனக்கு ஒரு பிரச்னை என்றதும் அதற்காக குரல் கொடுக்கும் மீனா, மற்றவர்கள் மீதும் அக்கறையாக இருக்கிறார். நாடகத் தன்மையுடன் இல்லாமல் இயல்பான கதாபாத்திரமாக இருக்கும் மீனா, ரசிகர்களிடம் எளிதில் நெருக்கமாகிவிடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீனாவாக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார், தனியாக யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. ஷாத்விக் எனப் பெயரிடப்பட்ட, தனது மகனின் முதல் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார் ஹேமா. அதோடு மகனுக்கு ஃபோட்டோஷூட்டையும் நடத்தினார். தற்போது அந்த வீடியோக்களை தனது யூ-ட்யூப் சேனலில் பதிவேற்றியுள்ளார் ஹேமா.

' isDesktop="true" id="566349" youtubeid="tdl0Ef1z2_A" category="television">

' isDesktop="true" id="566349" youtubeid="wyqBSPDPXdA" category="television">

இதைப் பார்த்த ரசிகர்கள் ஹேமாவுக்கும் அவரது மகன் ஷாத்விக்கிற்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv