Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு மாரடைப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு மாரடைப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

அண்ணன் கொடுத்த வாக்கை மீற முடியாமல், ஜனார்த்தனனின் கைகளைப் பிடித்து நான் பாத்துக்குறேன் மாமா என்கிறான் ஜீவா.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அப்பாக நடித்து வரும் ஜனார்த்தனனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

    பொதுவாக சீரியல்கள் என்றாலே பழி வாங்கும் எண்ணம் அதிகமாக இருக்கும்படி தான் கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸைப் பொறுத்தவரை, குடும்பத்திற்குள் வரும் பிர்ச்னைகளை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அவர்களே சரிசெய்துக் கொள்கிறார்கள். இதனால் அந்த சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மீனாவின் அப்பா ஜனார்த்தனனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவர் அவரை ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். நான் இல்லாட்டி என் பிஸினஸை யார் பாத்துக்குவா என ஜனார்த்தனன் யோசிக்க, ஜீவா உங்கள் கடையைப் பார்த்துக்குவான் என உறுதியளிக்கிறார் மூர்த்தி.

    நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...



    அண்ணன் கொடுத்த வாக்கை மீற முடியாமல், ஜனார்த்தனனின் கைகளைப் பிடித்து நான் பாத்துக்குறேன் மாமா என்கிறான் ஜீவா. தனது மாப்பிள்ளை ஜீவாவை எப்படியாவது குடும்பத்தில் இருந்து பிரித்து, தனது பிஸினஸைப் பார்த்துக் கொள்ள செய்ய வேண்டும் என்பது தான் ஜனார்த்தனனின் நீண்டகால திட்டம். தற்போது அதற்கேற்றவாறு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ஜீவாவே அவரது வழிக்கு வரும்படியான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கும் என்பதை வரும் நாட்களில் தெரிந்துக் கொள்வோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி