தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கும் தனது மகன் விக்ராந்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நடிகை ஷீலா தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.
இந்நிலையில் தற்போது அந்த சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக நடித்து வந்த லட்சுமியின் கதாபாத்திரம் இறந்ததைப் போல காட்டப்பட்டு, அதில் நடித்து வந்த ஷீலா தூக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பி-க்காக தான் இப்படி செய்திருக்கிறார்கள் என ஒருபுறம் சொன்னாலும், அவரது மகனும் நடிகருமான விக்ராந்தும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.
பிக் பாஸில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விஜய் டிவி தரப்பில் விக்ராந்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதால், அதிருப்தி அடைந்த விஜய் டிவி தரப்பு ஷீலாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த நடிகை ஷீலா, தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு விக்ராந்த் தான் காரணம் என்பது வெறும் வதந்தி தான் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் விஜய் டிவி-யின் புதிய சீரியலில், தான் ஹீரோயினின் அம்மாவாக நடிக்கவிருப்பதாகவும், என்னை வேண்டுமென்றே நீக்கியிருந்தால், எதற்கு மீண்டும் அழைக்கனும்? எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial