போலியான சோஷியல் மீடியா அக்கவுண்ட் - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் புகார்

போலியான சோஷியல் மீடியா அக்கவுண்ட் - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் புகார்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தனது பெயரில் உலா வரும் போலியான ஃபேஸ்புக் கணக்குகள் குறித்து புகாரளிக்கப்பட்டிருப்பதாக நடிகர் குமரன் தங்கராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையப்படுத்தி இத்தொடரின் கதை அமைக்கப்பட்டிருப்பதால் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறது.

இத்தொடரில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக கதிர் என்ற கேரக்டரில் முல்லைக்கு கணவனாக நடித்து வருபவர் குமரன் தங்கராஜன். இவர் ஏற்கெனவே சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் குறும்படங்கள் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கும் குமரன் தங்கராஜனை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் தனது பெயரில் அதிகமான போலியான ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் குமரன், அதிலிருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் நான் அனுப்பியது அல்ல என்றும் ஃபேஸ்புக்கில் தான் ஆக்டிவ்வாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் போலியான சமூகவலைதள பக்கங்கள் மீது புகாரளித்திருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
குமரனின் வீடியோ பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் சரியான நேரத்தில் எங்கள் மீது அக்கறை வைத்து விளக்கமளித்திருக்கிறீர்கள். இனி போலியான ஃபேஸ்புக் பக்கங்களை நம்பாமல் பாதுகாப்பாக இருப்போம் என்று கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: