முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்... தங்கையின் நெகிழ்ச்சிப் பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் செய்த காரியம்... தங்கையின் நெகிழ்ச்சிப் பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலா இறந்ததாகக் காட்டப்பட்ட நிலையில், கடைசியாக அவரின் முகத்தை கூட பார்க்க முடியாமல் துடித்துப் போகிறான் கடைக்குட்டி கண்ணன்.

  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் டெடிகேஷனை அவரது தங்கை சமூக வலைதளத்தில் புகழ்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

தற்போது இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலா இறந்ததாகக் காட்டப்பட்ட நிலையில், கடைசியாக அவரின் முகத்தை கூட பார்க்க முடியாமல் துடித்துப் போகிறான் கடைக்குட்டி கண்ணன். வீட்டை எதிர்த்து ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டதால், குடும்பத்தினர் அவனை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறார்கள். இதனால் அம்மாவின் இறுதிச்சடங்கில் கூட அவனால் கலந்துக் கொள்ள முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

pandian stores, pandian stores kannan, pandian stores saravana vickram, pandian stores kannan aishwarya, pandian stores kannan accident, kannan accident, saravana vickram dedication, vijay tv pandian stores, pandian stores director, pandian stores hotstar, pandian stores latest episode, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநர், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹாட்ஸ்டார், பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று எபிசோட், பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று நடந்தது, பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சீரியல், பாண்டியன் ஸ்டோர் நேற்று எபிசோட், பாண்டியன் ஸ்டோர்ஸ் டுடே எபிசோட், pandian stores season 1, pandian stores yesterday hotstar, pandian stores promo, pandian stores meena, pandian stores sharechat, pandian stores mullai, pandian stores kathir, pandian stores kannan, பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், சரவண விக்ரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

இந்நிலையில் நிஜத்திலேயே மொட்டை அடித்துள்ளார் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம். இது குறித்து அவரது தங்கை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “உனது நடிப்பு, குரல், டெடிகேஷன் ஆகியவற்றை பலர் பாராட்டி வருகிறார்கள். உனது தங்கையாக இருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். இதையெல்லாம் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இப்போது எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் என்பதை என்னால் சொல்லவே முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Vijay tv