• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தாய் பாசத்தில் ரசிகர்களை உருக வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜ அம்மா இவர் தான்!

தாய் பாசத்தில் ரசிகர்களை உருக வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜ அம்மா இவர் தான்!

தனது அம்மாவின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம்.

  • Share this:
    தனது நிஜ அம்மாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம்.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

    சமீபத்தில் இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலா இறந்ததாகக் காட்டப்பட்ட நிலையில், கடைசியாக அவரின் முகத்தை கூட பார்க்க முடியாமல் துடித்துப் போனான் கடைக்குட்டி கண்ணன். வீட்டை எதிர்த்து ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டதால், குடும்பத்தினர் அவனை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறார்கள். இதனால் அம்மாவின் இறுதிச்சடங்கில் கூட அவனால் கலந்துக் கொள்ள முடியவில்லை.



     




    View this post on Instagram





     

    A post shared by SaravanaVickram (@saravanavickram)






    இதையடுத்து நிஜத்தில் மொட்டையடித்த கண்ணன், தனது அம்மாவை இழந்த துக்கத்தில் கதறியழும் காட்சிகள் கடந்த வாரம் முழுக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒளிபரப்பாகின. பெரும்பாலும் காமெடியான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கண்ணனின் வேறு பரிமாணம் வெளிப்பட்டது.

    இந்நிலையில் தனது அம்மாவின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த அன்பான அம்மா - பையனுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: