Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் திடீர் திருப்பம்... விஜய் டிவியின் புதிய வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இந்த வாரம் இரண்டு நாட்களில் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன்- தம்பி பாசம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இத்தொடரின் கதை உருவாக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களி டையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்து வருகிறது.

இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சற்று சரிவை சந்தித்தது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மளிகைக் கடையை விளம்பரப்படுத்தி தங்களுக்கான வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ள அண்ணன், தம்பிகள் உள்ளிட்ட அனைவரும் திட்டம் தீட்டி செயல்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக திடீர் திருப்பம் ஏற்பட உள்ளது.

சத்திய மூர்த்தி - தனம் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் ஃபிளாஷ் பேக் கதை சொல்ல உள்ளனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர். தந்தை இல்லாமல் மூன்று தம்பிகளை பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் சத்திய மூர்த்தி எப்படி வளர்த்தார். தொடர்ந்து கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வந்த சத்திய மூர்த்தி வாழ்க்கையில் தனம் வந்தது எப்படி என்பது உள்ளிட்ட பத்து வருடங்களுக்கு முன் நடந்த கதையை இரண்டு நாட்களாக ஒளிபரப்ப உள்ளதாக விஜய் டிவி தெரிவித்துள்ளது.



ஏப்ரல் 29, 30 ஆகிய இரண்டு நாட்களில் 2.30 மணி நேரம் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகும் என்றும் விஜய் டிவி வெளியிட்டிருக்கும் புதிய வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: