Home /News /entertainment /

கதறி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்... நடந்தது என்ன?

கதறி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்... நடந்தது என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களான சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகியோரின் தாயான லட்சுமி திடீரென இறப்பதை போல காட்சிகள் இடம்பெற

  ஸ்டார் விஜய் டிவி-யில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலுக்கு ரசிகர்கள் மிக அதிகம்.

  அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பாச காட்சிகள், சின்ன சின்ன சண்டைகள், நகைச்சுவைகள் உள்ளிட்டவை மிக சுவாரசியமாக காட்டப்பட்டு வருவதால் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று விஜய் டிவி சீரியல்களிலேயே முதலாவது இடத்தில் இருக்கிறது. மறைந்த பிரபலமான விஜே சித்ரா இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தார்.

  இந்த சீரியல் இவர் நடித்த போதே ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தாலும், இவரது மறைவிற்கு பின் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைகுட்டியான கண்ணனின் காதல் திருமணத்தால் குடும்பமே கதிகலங்கி போயுள்ளது போல் சமீப நாட்களின் எபிசோட்கள் சென்று கொண்டிருந்த வேளையில், இப்போது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அதை மறந்து இயல்பு நிலைக்கு திரும்புவதை போல காட்டப்பட்டது. இதனிடையே பின்வரும் எபிசோடில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி நிறைந்த சம்பவம் காத்திருக்கிறது.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களான சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகியோரின் தாயான லட்சுமி திடீரென இறப்பதை போல காட்சிகள் இடம்பெற்றுள்ள ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்தால் மனம் உடைந்து போகும் லட்சுமி அம்மா, பல நாட்களாக யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதை போல காட்டப்பட்டிருந்தது. எனினும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி சகஜ நிலைக்கு திரும்பியதை அடுத்து மருத்துவமனையிலிருந்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

  பழைய மாதிரி அனைவரிடமும் சகஜமாக பேசி கொண்டிருந்த லட்சுமி அம்மா, தனது கணவரின் 20-ஆம் ஆண்டு நினைவு நாளை வழக்கம் போல கடைப்பிடிப்பது பற்றி குடும்ப உறுப்பினர்களிடம் விவாதிப்பது போல கடைசி எபிசோடில் காட்டப்பட்டது. அந்த சமயத்தில் பேசும் போது கூட நாளை நிலைமை எப்படியோ யாருக்கு தெரியும் என்று அடிக்கடி கூறுவது போலவும் காட்சிகள் ஒளிபரப்பானது. ஆனால் லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோவில் லட்சுமி அம்மா மூச்சி பேச்சின்றி கிடப்பதை பார்த்து, குடும்பத்தினர் டாக்டருக்கு தகவல் சொல்வது போலவும், அவர் வந்து பரிசோதித்து விட்டு மூர்த்தியிடம் அம்மா தவறிட்டாங்க என்று சொல்வதால், அனைவரும் கதறி அழுவது போலவும் சீன்கள் இடம்பெற்றுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து, இது கண்ணனின் கனவாக இருக்க கூடாதா என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கடைசி எபிசோடில் அம்மாவை பார்க்க வீட்டு வாசலில் வந்து நிற்கும் கண்ணனை அவனது அண்ணி தனத்தின் தாய் திட்டி அனுப்பி விடுவது போல காட்டப்பட்டிருந்தது. கல்யாணம் செய்து கொண்ட பிறகு ஒருமுறை கூட தன் அம்மாவை கண்ணன் பார்க்காமல் இருப்பது போல சீரியல் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Vijay tv

  அடுத்த செய்தி