Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் மாற்றம்?

Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் மாற்றம்?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலை ‘ஆனந்தம்’ படத்தின் டிவி வெர்ஷன் எனச் சொல்லலாம்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து அதன் இயக்குநர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

    VJ Lokesh: உயிரை மீட்ட விஜய் சேதுபதிக்கு நன்றி – வி.ஜே.லோகேஷ் நெகிழ்ச்சி வீடியோ!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதிர் - முல்லையின் ரொமான்ஸ் ரசிகர்களால் வெகுவாக ரசிகப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதைத் தொடர்ந்து, தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். ஆனால் முன்பு போல் டி.ஆர்.பி-யில் இடம் பிடிக்கவில்லை.

    Bigg Boss: தனுஷுடன் பிக் பாஸ் பிரபலம் – வைரலாகும் குழந்தைப் பருவ படம்!

    இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பாக்கியலட்சுமி சீரியலையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலையும் இணைத்து ஒளிபரப்பினார்கள். இதற்கிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குநர் மாற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநர் தான் அதனை இயக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: