ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாவாடை தாவணியில் பட்டையைக் கிளப்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வைரலாகும் டான்ஸ் வீடியோ!

பாவாடை தாவணியில் பட்டையைக் கிளப்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வைரலாகும் டான்ஸ் வீடியோ!

சுஜிதா தனுஷ்

சுஜிதா தனுஷ்

பொதுவாக சின்னத்திரையில் ஒரு சீரியல் பிரபலமாகிறது என்றால் அதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவது வழக்கம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பட்டு வரும் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பாச காட்சிகள், சின்ன சின்ன சண்டைகள், நகைச்சுவைகள் உள்ளிட்டவை மிக சுவாரசியமாக காட்டப்பட்டு வருவதால் ரசிகர்களின் அமோக ஆதரவை இந்த சீரியல் பெற்று வருவருகிறது.

  பொதுவாக சின்னத்திரையில் ஒரு சீரியல் பிரபலமாகிறது என்றால் அதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவது வழக்கம். அதேபோல, சமூக வலைத்தளத்தில் ஒவ்வொருவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். அந்த வகையில், இந்த சீரியலில் தனம் என்ற அண்ணி வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே அதிகம் பிரபலமடைந்தவர் தான் நடிகை சுஜிதா. இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், விளம்பர விடீயோக்களை தயாரிக்கும் தனுஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் கைக்குழந்தையாக இருக்கும் போதே தமிழில் 1983-ம் ஆண்டு அப்பாஸ், முந்தானை முடுச்சு ஆகிய திரைப்படங்களில் தோன்றி திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

  தமிழ் அல்லது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைபடங்களில் சிறு சிறு காதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், சின்னத்திரையில் நுழைந்தார். தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் சீரியல் தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் இவர். மலையாளத்தில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க தொடங்கிய இவர், 40-ற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் இதற்கு முன்பு இவர், கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி, மைதிலி, விளக்கு வச்ச நேரத்திலே, ஒரு கை ஓசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by sujiakka myworld (@sujiakka_myworld)  மேலும், எண்ணற்ற விளம்பரங்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் இவர், கன்னடத்திலும் இதே தொடரில் நடித்து வருகிறார். தொடரில் இவரது கதாபாத்திரம் முதலில் இருந்து மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. மேலும் அடிக்கடி தனது சாரி கலெக்ஷன்களை புகைப்படங்களாக சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதும் வழக்கம். மேலும், இவர் தனக்கென ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகை சுஜிதாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், தாவணி பாவாடை கட்டிக்கொண்டு மற்ற பெண்களுடன் நடனமாடுகிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial, Vijay tv