• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா கதாபாத்திரம் - காரணம் இது தான்...

மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா கதாபாத்திரம் - காரணம் இது தான்...

வி.ஜே.தீபிகா

வி.ஜே.தீபிகா

ஏற்கனவே ஐஸ்வர்யாவாக நடித்து வந்த வைஷாலி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் வி.ஜே.தீபிகா நடித்து வந்தார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக முகப்பருவே காரணம் என வி.ஜே.தீபிகா தெரிவித்துள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல், அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்டுள்ளது. ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பாச காட்சிகள், சின்ன சின்ன சண்டைகள், நகைச்சுவைகள் உள்ளிட்டவை மிக சுவாரசியமாக காட்டப்பட்டு வருவதால் ரசிகர்களின் அமோக ஆதரவை இந்த சீரியல் பெற்றுள்ளது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் மொத்த குடும்பமும் அவனை வெறூத்து ஒதுக்கினார்கள். அதோடு வீட்டை விட்டும் வெளியேற்றினார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா மாற்றப்பட்டு, அந்த கதாபாத்திரத்தில் ‘ஈரமான ரோஜாவே’ சாய் காயத்ரி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    ஏற்கனவே ஐஸ்வர்யாவாக நடித்து வந்த வைஷாலி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் வி.ஜே.தீபிகா நடித்து வந்தார். இதற்கிடையே மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்பட்டதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தான் மாற்றப்பட்டது குறித்து முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்த தீபிகா, “எனக்கு முகப்பரு அதிகமாக இருக்குங்குறதால நான் டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். சேனலில் இருந்தும் அதை சரி பண்ண எனக்கு டைம் கொடுத்தாங்க. ஆனா, அந்த டிரீட்மென்டுக்கு கொஞ்சம் டைம் எடுக்குங்கிறதால வேற வழி இல்லாம தான் என்னை மாத்திட்டாங்க” என்று தெரிவித்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆக, தீபிகாவின் முகப்பரு தான், அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து மாற்றப்படுவதற்கு காரணமாகியிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: