பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு விஜய் வீட்டில் இருந்து வந்த அழைப்பு..

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நடிகர் வெங்கட்டை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு விஜய் வீட்டில் இருந்து வந்த அழைப்பு..
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் சீரியல் நடிகர் வெங்கட்
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2020, 1:37 PM IST
  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த தொடரில் மூன்று தம்பிகளில் ஒருவராக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். ஜீவா - மீனா கேரக்டருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தவிர சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ தொடரிலும் வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு விஜய் வீட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வெங்கட், பழம்பெரும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்னை போனில் அழைத்தார். மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னை அழைக்க காரணம் விஜய்யின் தாயார் ஷோபா மேம் தான்.

அப்போதுதான் ஷோபா மேம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மிகப்பெரிய ரசிகர் என்பது எனக்குத் தெரிந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் சார் புதிய படத்துக்கு நடிகரைத் தேடிக் கொண்டிருக்கையில் ஷோபா மேம் தான் என்னை பரிந்துரை செய்தார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.




இவை அனைத்தும் கொரோனா ஊரடங்குக்கு முன்னால் நடந்திருக்க வேண்டியது. ஆனால் இந்த கொரோனா வந்து மாற்றி விட்டது. கொரோனா எல்லோருடைய வாழ்க்கையிலும் விளையாடிவிட்டது என்னையும் சேர்த்து. எது எப்படியோ ஆனால் நான் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மகிழ்வான விஷயம்.


 




View this post on Instagram




 

READ FULLY 😞 . . “Legendary Director” Lifetime honour! Feeling so honoured for this. I was so excited after receiving a call from S.A. C Sir office. My heart jumped like a puppy. How could I control my excitement? Got to meet Sir only because of Shoba Mam. Sir was in search of Lead for his new project and She recommended me as she is a “GREAT FOLLOWER” of Pandian stores. She Only Recommended To Sir Checkout This Guy “JEEVA” For Ur New Project. 😍🥰 That happiness makes you crazy when you hear such words from the legends. I will be so grateful to her forever Thank you so much Mam. But It All Happend Before Lockdown Because of this Corona 😞 Lockdown happened then what to say! Corona Elar Life laium Senju Vitu tu Pona Mathri My Life Too, Whatever this is my lifetime happiness to meet Sir and talk in person.மீண்டும் இது போல் சந்தர்ப்பங்கள் நல் விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் 😎👍🏻☺️. 𝗟𝗢𝗩𝗘 𝗨𝗿 𝗦𝗶𝗺𝗽𝗹𝗶𝗰𝗶𝘁𝘆 𝗦𝗶𝗿 🙏. Ithe Mathri “❤️THALAPATHY❤️” a One Day Pakanum.. @ajuvenkat


A post shared by Venkat Renganathan (@venkat_renganathan) on






மீண்டும் இது போல் சந்தர்ப்பங்கள் நல் விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன். இதேபோல் ஒருநாள் தளபதி விஜய்யையும் பார்க்க வேண்டும்” இவ்வாறு நடிகர் வெங்கட் ரங்கநாதன் கூறியுள்ளார்.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading