• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரசிகர்களுக்கு முகத்தை காட்டாத நிஷா.. பின்னால் இருக்கும் அந்த காரணம்!

ரசிகர்களுக்கு முகத்தை காட்டாத நிஷா.. பின்னால் இருக்கும் அந்த காரணம்!

விஜய் டிவி நிஷா

விஜய் டிவி நிஷா

வெள்ளத்திரைக்கு திரும்பியிருக்கும் வடிவேலுவுக்கு டஃப் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

  • Share this:
    சின்னத்திரை நயன்தாரா என கூறிக்கொள்ளும் நடிகை அறந்தாங்கி நிஷாவின் நாய் சேகர் கெட்டப் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    பட்டிமன்ற பேச்சாளராக இருந்து கலக்கப்போவது யாரு ஷோ மூலம் விஜய் டீவிக்குள் நுழைந்த நிஷா, ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கி சின்னத்திரை பிரபலமாக உயர்ந்துவிட்டார். விஜய் டிவியில் அறிமுகமாகும் அனைத்து ஷோக்களிலும் அவர் இல்லாமல் இருப்பதில்லை. கலக்கப்போவது யாரு ஷோவுக்குப் பின்னர், கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், ராமர் வீடு என வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்ட காமெடி ஷோக்களில் பங்கேற்று வந்த நிஷா, பிக்பாஸ் ஷோவுக்கும் சென்று வந்தார்.

    அந்த ஷோவில்  கடும் எதிர்ப்பை சந்தித்தாலும், அதில் இருந்து வெளியே வந்தபிறகு மிஸ்டர் & மிஸ் சின்னத்திரை, காமெடி ராஜா கலக்கல் ராணி, பிக்பாஸ் ஜோடிகள் என அடுத்தடுத்த ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். அவருக்கு எதிர்ப்புகள் குறைவாக இருந்தாலும், ரசிகர்கள் ஏராளம். காமெடி, டைமிங், ரைமிங் என அனைத்து பக்கங்களில் ரவுண்டு கட்டி அடிக்கும் திறமை இருப்பதால், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் தாவினார். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

    தற்போது வெள்ளித்திரையில் பெரிய வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிஷா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளத்திரைக்கு திரும்பியிருக்கும் வடிவேலுவுக்கு டஃப் கொடுக்க முடிவெடுத்துள்ளார். வைகைப்புயல் வடிவேலுவின் டிரேட் மார்க் கேரக்டர்களில் ஒன்றான ’நாய் சேகர்’ கெட்டப்பில் புகைப்படம் எடுத்துள்ள நிஷா, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இது என்ன கெட்டப், யாரு நடிச்சாங்கனு சொல்லுங்க.... என ரசிகர்களிடமும் வினவியுள்ளார்.




    அவரின் இந்தக் கேள்விக்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்கள், நாய் சேகர் கெட்டப்பில் சூப்பராக இருக்கீங்க நிஷா, வடிவேலு சாருக்கு டஃப் கொடுக்க கிளம்பிட்டீங்க போல என கிண்டலாக பதிவிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பியிருக்கும் வைகைப் புயல், புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, அவர் நடிக்கும் படத்துக்கு தேர்ந்தெடுத்த ‘நாய் சேகர்’ டைட்டில் கூட சர்ச்சையில் சிக்கியது. நடிகர் சதீஷ் நடிக்கும் திரைப்படத்துக்கு ‘நாய் சேகர்’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நேரத்தில் நிஷாவின் ‘நாய் சேகர்’ கெட்டப் புகைப்படம் வெளியானதால், சீக்கரம் வைரல் லிஸ்டில் இடம்பிடித்தது. நடிகர் சதீஸ் நடிக்கும் நாய் சேகர் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த டைட்டிலை மாற்றுமாறு நடிகர் வடிவேலு தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டிலை, வடிவேலுவின் படக்குழு தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: