• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஒளிபரப்புக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல்... சுடச்சுட அப்டேட் கொடுத்த சின்னத்திரை நடிகை!

ஒளிபரப்புக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல்... சுடச்சுட அப்டேட் கொடுத்த சின்னத்திரை நடிகை!

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தொடர்பாக சோஷியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ள சியமந்தா

  • Share this:
    சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்களை ஈர்க்க தவறுவதில்லை.

    டான்ஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் இருந்து சீரியல்கள் வரை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டு சிறப்பாக இருப்பதால் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் எப்போதும் டாப்பில் இருக்கின்றன. ரசிகர்களை தக்க வைக்கும் வகையில் பல விறுவிறுப்பான சீரியல்களை களமிறக்கி உள்ள விஜய் டிவி, சமீபத்தில் பல புதிய சீரியல்களை துவக்கி உள்ளது.

    அந்த வகையில் இரவு 7.30-க்கு ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியலான தமிழும் சரஸ்வதியும் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இந்த வாரம் முதல் மதிய நேரத்தில் 2 புதிய சீரியல்களை ஒளிபரப்ப துவங்கி இருக்கிறது விஜய் டிவி.அதில் ஒன்று தான் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். கடந்த திங்கட்கிழமை முதல் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மதியம் 3 முதல் 3.30 வரை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நாயகனாக நடித்து வரும் நடிகர் வினோத் பாபு, வெற்றி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

    கதையின் நாயகியாக ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினாக நடித்த பவித்ரா ஜனனி, அபிநயா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அபிநயாவிற்கு கோவிலில் வைத்து கட்டாய தாலி கடும் நாயகன் செயல் மூலம் ஒளிபரப்பாவதற்கு முன்பே ப்ரமோ வீடியோ மூலம் காவல்துறையின் நேரடி விமர்சனத்தை சந்தித்த இந்த சீரியல் ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சீரியலில் நடிகை சியமந்தா கிரணும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Syamantha Kiran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@syamanthakiran)






    இவரை தவிர நந்தினி கேரக்டரில் ரம்யா ஜோசப், அன்புசெல்வன் கேரக்டரில் ராஜ்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த சீரியலில் அன்புசெல்வன் கேரக்டரில் நடிக்கும் ராஜ்குமாரின் மனைவியாக மற்றும் கதாநாயகன் வெற்றியின் அண்ணியாக சித்ரா என்ற கேரக்டரில் நடிகை சியமந்தா கிரண் நடிக்கிறார். வம்சம் சீரியல் உத்ராவாக, ஆயுத எழுத்து சீரியலில் கோதையாக, சில்லுனு ஒரு காதல் சீரியலில் ராஜேஸ்வரியாக, நிலா சீரியலில் அஞ்சலியா, சரவணன் மீனாட்சி சீரியலில் சத்யாவாக மற்றும் பல நிகழ்ச்சிகளில் தோன்றி சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை சியாமந்தா கிரண்.

    ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் கோபிக்கு இருக்கு வேட்டு!

    தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தொடர்பாக சோஷியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ள சியமந்தா கிரண், எப்போதாவது உங்கள் அனைவரையும் மகிழ்விக்க நாங்கள் வருகிறோம் என்பதால் அமைதியாக இருக்க முடியாது ! சீரியலில் இருக்கும் இந்த மகிழ்ச்சியைப் பார்க்கத் தவறாதீர்கள் என்று கூறி சில போட்டோக்களை ஷேர் செய்து இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: