ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நினைவிழந்த தந்தை, பார்வையற்ற தாய்... விஜய் டிவி-யின் புதிய சீரியல் கண்ணே கலைமானே!

நினைவிழந்த தந்தை, பார்வையற்ற தாய்... விஜய் டிவி-யின் புதிய சீரியல் கண்ணே கலைமானே!

கண்ணே கலைமானே சீரியல்

கண்ணே கலைமானே சீரியல்

பெரிய நடிகர் ராம் தான் தன் தந்தை என்பதை அறியாத தமிழ், அவனுடைய தீவிர ரசிகையாகிறாள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவி-யில் கண்ணே கலைமானே என்ற புத்தம் புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

  10 அக்டோபர் 2022 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு ‘கண்ணே கலைமானே’ என்ற தலைப்பில் மற்றொரு அழகான காதல் மற்றும் குடும்ப நாடகத்தை ஸ்டார் விஜய் ஒளிபரப்புகிறது. பானுமதி என்ற பார்வையற்ற இளம் தாய், தனது எட்டு வயது மகள் தமிழுடன் சகோதரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பானுமதியும் அவரது மகளும் தனது அண்ணியின் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.

  பானுமதியை திருமணம் செய்து கொள்ளவிருந்த ராம், அவரை கர்ப்பமாக்குகிறார். இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்த சமயத்தில், ஒரு விபத்தை சந்திக்கிறார். அதில் அவர் உயிர் பிழைத்தாலும் நினைவாற்றலை இழக்கிறார். பின்னர் வசதியான தம்பதியினரின் உதவியால் ஒரு பிரபலமான நடிகராகிறார். அந்த தம்பதி தங்களின் மகள் மாதுரிக்கு, ராமை திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்களுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர்களாகிறார்கள்.

  பார்வையற்ற இளம் தாய் பானுமதியும் அவரது மகள் தமிழும் ராம் வசிக்கும் நகரத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரிய நடிகர் ராம் தான் தன் தந்தை என்பதை அறியாத தமிழ், அவனுடைய தீவிர ரசிகையாகிறாள். பானுமதி கண்பார்வையின்றி ராமை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வாள், ராமின் கடந்த காலத்தை அறிய நினைவு திரும்ப வருமா? அவர்களின் மகள் தமிழ் என்னாவாள்? மாதுரிக்கு இந்த உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது இந்த கண்ணே கலைமானே சீரியல்.

  Bigg Boss Tamil 6: ஜி.பி.முத்து முதல் ஜனனி வரை... பிக் பாஸ் 20 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

  ' isDesktop="true" id="816662" youtubeid="i9QXXoW2XXc" category="television">

  இதில் பானுமதியாக பவித்ரா, ராமாக நந்தா, தமிழாக சம்யுக்தா, மாதுரியாக ரஷ்மி நடிக்கின்றனர். இனி திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு கண்ணே கலைமானே சீரியலை விஜய் டிவி-யில் பார்த்து ரசிக்கலாம்.

  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial, Vijay tv