இல்லத்தரசிகள் முதல் வீட்டில் உள்ள குழந்தைகள் வரை அனைவரையும் தன்பால் கவர்ந்திழுக்கும் விதமாக சீரியர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் எப்போதும் சன் டி.வி. மற்றும் விஜய் டி.வி.க்கு நடுவே மிகப்பெரிய போட்டியே நிலவி வருகிறது. என்ன தான் சன் டி.வி. பல ஆண்டுகளாக சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும், லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏற்ற விஷயங்களுடன் விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் பரபரப்பான எபிசோட்களை கொண்ட சீரியல்களை ஒளிபரப்புவதில் விஜய் டி.வி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதற்கு சாட்சியாக , ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கியலட்சுமி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘ராஜா ராணி 2’, ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’, ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’, ‘மௌனராகம் 2', ‘தமிழும் சரஸ்வதியும்’ ‘காற்றுக்கென்ன வேலி’, ‘பாவம் கணேசன் ’, ‘நம்ம வீட்டு பொண்ணு’, ‘தென்றல் வந்து என்னை தொடும்', ‘முத்தழகு’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இருப்பினும் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் சரியாக போகாததால் செந்தூரப்பூவே, வேலைக்காரன் ஆகிய இரண்டு சீரியல்கள் சமீபத்தில் விஜய் டி.வி. நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டது. இதில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘வேலைக்காரன்’ என்ற சீரியலுக்குப் பதிலாக ‘செல்லம்மா’ என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
Also read... புதுப்பேட்டை 2ம் பாகம் உருவாகுமா? செல்வராகவன் பதில்
பெண் பிள்ளை மற்றும் மனைவியை தனியே தவிக்கவிட்டுச் சென்ற கணவன் முன்பு வெற்றிகரமாக தனது மகளை வளர்த்து ஆளாக்க போராடும் செல்லம்மா என்ற ஒற்றைத் தாயின் கதையாக ‘செல்லம்மா’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை அன்ஷிதா அக்பர்ஷா செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ஒற்றை தாயின் வலியை வெளிப்படுத்தும் விதமாக பல புரோமோ வீடியோக்களை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது. அவை அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முதல் வாரத்திலேயே சீரியல் அசத்தலான சாதனையையும் படைத்துள்ளது.
View this post on Instagram
தனது சொந்த ஊரில் தன்னிடம் தப்பாக நடக்க நினைத்தவரிடம் இருந்து குழந்தையுடன் தப்பி சென்னை வருகிறாள் செல்லம்மா. இங்கு வந்து கணவனைத் தேடிச்சென்ற செல்லம்மாவிற்கு, அங்கு தனது கணவன் விநாயகம், மாணிக்கம் என்ற பெயரில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதை பார்த்து கடுங்கோபம் அடைகிறாள். மகளையும், மனைவியையும் தவிக்க விட்டு வந்த உன் முன்னால் நன்றாக வாழ்ந்து காட்டுவேன் என சவால் விட்டுவிட்டு வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகியிருக்கிறாள் செல்லம்மா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆரம்பத்திலேயே அதிரடி டுவிஸ்ட் உடைக்கப்பட்டு அடுத்து செல்லம்மா என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் முதல் வாரமே சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் 3.8 பாயிண்ட்களை செல்லம்மா சீரியல் எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி நகர்ப்புறங்களில் மதியத்தில் பார்க்கப்படும் நெம்பர் ஒன் சீரியல் என்ற பெருமையையும் செல்லம்மா சீரியல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Vijay tv